'தலைக்கவசம் கட்டாயம்'

'தலைக்கவசம் கட்டாயம்'

1 mins read
ecf84e9c-ca1e-4248-8c13-6a18e7fdac68
-

புதுவை: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாளை ஒன்றாம் தேதி முதல் தாலைக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. மோட்டார் சைக்கிள் வாகனத்தை ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து வருபவர் இருவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்லவேண்டும்.

இதனை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை காவல் ஆய்வாளர் மாறன் எச்சரித்துள்ளார்.

பள்ளிச் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் ஓட்டிய வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு, அவர்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாறன் மேலும் கூறியுள்ளார்.