இலங்கையில் இருந்து தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்ட 35.6 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

இலங்கையில் இருந்து தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்ட 35.6 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

1 mins read
d3725134-36f2-45c9-91ef-2f15511f9018
-

சென்னை: இலங்கையில் இருந்து கடல்­வ­ழி­யாக கடத்தி வரப்­பட்ட ரூ.18 கோடியே 34 லட்­சம் மதிப்­புள்ள 35.6 கிலோ தங்­கக் கட்­டி­களைச் சென்னை வரு­வாய்ப் புல­னாய்வு இயக்­கு­ந­ரக அதி­கா­ரி­கள் பறிமுதல் செய்துள்ள­னர்.

அத்துடன், தங்கத்தைக் கடத்தி வந்த மூவரைக் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது­கு­றித்து அதிகாரிகள் கூறு கையில், "தங்கம் கடத்தி வரப்படுவ தாக எங்களுக்கு ரக­சி­யத் தக­வல்கள் கிடைத்ததை அடுத்து, மதுரை-ராம­நா­த­பு­ரம் நெடுஞ்சாலை­யில் அமைந்­துள்ள சுங்­கச்சாவ­டி­யில் விழிப்பு நிலையில் சோதனையில் ஈடுபட்டோம்.

"அப்­போது, அவ்­வ­ழி­யாக காரில் வந்த மூவரை மடக்­கிப் பிடித்து, அவர்­க­ளது காரை சோதித்தபோது காரில் தங்­கம் கடத்திவந்­தது கண்­டு­பி­டிக்கப்பட்டது.

"மூவரிடமும் நடத்­தப்­பட்ட முதற்­கட்ட விசா­ர­ணை­யில், இலங்­கை­யில் இருந்து தமி­ழக கடற்­கரை வழி­யாக தங்­கம் கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். யாருக்காக தங்கம் கடத்தி வரப் பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது," என்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள். படம்: தமிழக ஊடகம்