தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக காவல்துறை: அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை

2 mins read
10ff5c2e-385b-45bb-ae46-183e84166832
கார் வெடிப்புச் சம்பவம் நடந்த கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் பகுதியில் நேற்று ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள்.படம்: தமிழக ஊடகம் -

கோவை: கோவை கார் வெடிப்­புச் சம்­ப­வம் தொடர்­பாக, மாநில பாஜக தலை­வர் அண்­ணா­மலை தமி­ழக காவல்­து­றை­யி­னர் மீது அவ­தூறு பரப்­பு­வ­தாக காவல்­து­றைத் தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு குற்­றம்­சாட்­டி­ உள்­ளார்.

அண்­ணா­மலை கூறு­வ­து­போல் கோவை கார் விபத்­துச் சம்­ப­வத்­தைக் குறிப்­பிட்ட ஒரு­சி­லர்­தான் நடத்­தப் போகி­றார்­கள் என்ற தக­வல் கிடைத்திருந்­தால், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக தமி­ழக காவல்­துறை கைது செய்­தி­ருக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

முன்­னாள் கர்­நா­டக காவல் அதி­கா­ரி­யான அண்­ணா­மலை, இது­போன்ற உண்­மை­யில்­லாத செய்­தி­க­ளை­யும் வதந்­தி­க­ளை­யும் பரப்பி தமி­ழ­கக் காவல்­து­றைக்கு களங்­கம் விளை­விக்­க­வேண்­டாம் என்­றும் சைலேந்­தி­ர­பாபு கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

காவல்­துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், காவல்­துறை மீது அண்­ணா­மலை தொடர்ந்து அவ­தூறு பரப்பி வரு­கி­றார்.

கோவை சம்­ப­வம் குறித்து புலன் விசா­ரணை நடந்­து­கொண்­டி­ருக்­கும் போதே தவ­றான தக­வல்­க­ளைக் கூறி திசை திருப்பி வரு­கி­றார்.

மற்ற மாநி­லங்­களில் இது­போன்ற சம்­ப­வங்­களில் பல மாதங்­கள் கழித்­துக்­கூட என்­ஐஏ விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. ஆனால், இச்­சம்­ப­வத்­தில் அப்­படி தாம­தம் ஏற்படவில்லை என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மத்­திய உள்­துறை அமைச்சு முன்­கூட்­டியே எச்­ச­ரித்­த­தாக அண்­ணா­மலை கூறு­கி­றார். இது அபத்­த­மா­னது. மத்­திய அரசு உத்­த­ர­வி­டும் முன்பே, முதல்­வர் ஸ்டா­லின் என்­ஐஏ விசா­ர­ணைக்கு பரிந்­து­ரைத்­த­தா­க­வும் சைலேந்­தி­ர­பாபு விளக்­கம் அளித்­துள்­ளார்.

இத­னி­டையே, தமி­ழக காவல்­து­றை­யின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு விரை­வில் தகுந்த பதில் அளிக்­கப்­படும் என்று அண்­ணா­மலை டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

கோவைச் சம்­ப­வம் தொடர்­பாக தேசிய புல­னாய்வு முகமை அதிகாரிகள் (என்­ஐஏ) விசா­ரிக்­கும்­போது என்­னி­டம் உள்ள ஆதா­ரங்­க­ளைச் சமர்ப்­பிப்­பேன் என்­றும் அவர் கூறியி­ருக்­கி­றார்.

இந்நிலையில், என்­ஐஏ அதி­கா­ரி­கள் நேற்று தங்களது விசா­ரணை யைத் தொடங்­கி­னர்.

அவர்­க­ளி­டம், கடந்த 23ஆம் தேதி இந்­தச் சம்­ப­வம் நடந்­தது முதல் இப்போது வரை சேகரித்துள்ள அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும் கோவை மாந­க­ரக் காவ­லர்­கள் ஒப்­ப­டைத்­த­னர்.

இந்­நி­லை­யில், கோவை கார் வெடிப்­புச் சம்­ப­வம் நடந்த இடத்­தில் ஆய்வு மேற்­கொண்ட என்­ஐஏ அதி­கா­ரி­கள், சங்­க­மேஸ்­வ­ரர் கோயில் அர்ச்­ச­க­ரி­டமும் விசா­ரணை நடத்­தி­னர். விபத்­தால் சேத­மடைந்த கோயி­லின் முன்­ப­கு­தி­யை­யும் அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர். அந்­தப் பகு­தி­யில் பலத்த பாது­காப்பு போடப்­பட்டு இருந்­தது.