முன்னாள் அமைச்சர்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

முன்னாள் அமைச்சர்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

2 mins read
88a1c6f9-f862-4d43-846b-06fc7c2018ea
-

சிவகங்கை: சுதந்­தி­ரப் போராட்ட வீர­ரும் ஆன்­மி­க­வா­தி­யு­மான பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவ­ரின் 115வது பிறந்­த­நாள் விழா, 60வது குரு­பூஜை விழா நேற்று மாநிலம் முழு­வ­தும் கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டப்­பட்­டது.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், கமுதி அருகே, பசும்­பொன் கிரா­மத்­தில் அமைந்துள்ள முத்துராம­லிங்­கத் தேவ­ரின் சிலைக்கு மாலை அணி­வித்து, மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக அரசியல் பிரமுகர்கள் பலரும் வருகை தந்தனர்.

இதுபோல் வந்துகொண்டிருந்த அதி­முக முன்­னாள் அமைச்­சர்­களின் கார்கள் ஒன்­றோடு ஒன்று மோதியதில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அனை­வ­ரும் உயிர்­தப்­பி­னர்.

சிவ­கங்­கை­யி­லி­ருந்து மானா­மதுரை நெடுஞ்­சா­லை­யில் முன்­னாள் அமைச்­சர்­கள் காம­ராஜ், விஜயபாஸ்­கர், பாஸ்­க­ரன் உள்­ளிட்­டோர் பசும்­பொன் பகுதியை நோக்கி சென்­றுகொண்டிருந்தனர்.

அப்­போது, கார் ஒன்று எதிர்­பா­ராதவித­மாக குறுக்கே வந்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் முன்­னாள் சென்ற கார் திடீ­ரென 'பிரேக்' பிடித்­த­தால் அதி­முக முன்­னாள் அமைச்­சர்­க­ளின் கார்­கள் வரி­சை­யாக ஒன்­றின் மேல் ஒன்று மோதின. இதில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அனைவரும் காய­மின்றித் தப்­பி­னர்.

உடன் வந்த அதி­முக நிர்­வா­கி­கள் மணி­கண்­டன், ஜோதி­பாசு, கல்­யா­ண­சுந்­த­ரம், மதி­ய­ழ­கன், தமிழ்ச்­செல்­வன் ஆகி­ய ஐந்து பேர் பலத்த காய­முற்று, அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளனர்.

அத்துடன், அதி­முக முன்­னாள் அமைச்­சர்களின் கார்கள் உட்­பட ஆறு கார்­கள் சேத­ம­டைந்­தன.

இவ்­வி­ழாவை ஒட்டி தேவ­ரின் நினை­வி­டம் அமைந்­துள்ள பசும்­பொன்­னி­லும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் 10,000 காவ­லர்­கள் பாது­காப்­புப் பணிக்­காக குவிக்­கப் பட்­டி­ருந்­த­னர்.

அப்­ப­கு­தி­யில் ஆளில்லா வான்­கலன்­கள் பறக்­க­வும் தடை விதித்து காண்­கா­ணிப்­புப் பணி­யில் காவ­லர்­கள் ஈடு­பட்டனர்.

மதுரை கோரிப்­பா­ளை­யத்­தில் உள்ள முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் சிலைக்கு திமுக சார்­பில் துரை­மு­ரு­கன், கே.என்.நேரு, ஐ.பெரி­ய­சாமி, அன்­பில் மகேஷ் உள்­ளிட்ட அமைச்­சர்­கள் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னர். அதே­போல் அதி­முக சார்­பில், முன்­னாள் அமைச்­சர்­கள் ஆர்.பி. உத­ய­கு­மார், செல்­லூர் ராஜு, திண்­டுக்­கல் சீனி­வா­சன் உள்­ளிட்­டோர் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னர்.

மானா­ம­துரை-சிவ­கங்கை நெடுஞ்­சா­லை­யில் வைகை ஆற்றுப் பாலத்தைக் கடக்­கும்­போது முன்­னாள் அமைச்­சர்­க­ள் உள்ளிட்ட அறுவரின் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிநின்றன. படம்: ஊடகம்