'அஞ்சலக சேமிப்பைத் தொடருங்கள்'

'அஞ்சலக சேமிப்பைத் தொடருங்கள்'

1 mins read
f035733c-f80b-4fd8-993b-da35840aaac5
-

சென்னை: உலக சிக்­கன நாள் நேற்று 30ஆம் தேதி உலகெங்கும் கொண்­டா­டப்பட்­டது. இத்தினத்தை ஒட்டி, அஞ்­ச­ல­கங்­களில் சிறு சேமிப்புக் கணக்­கைத் தொடங்­கும்­படி மக்களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறிவுறுத்தி உள்ளார்.

ஒரு பொருளை இது 'தேவையா?' என்று பல­முறை சிந்­தித்து வாங்கு வதில் சிக்­க­னம் தொடங்­குவதாகக் கூறியுள்ள ஸ்டாலின், வாழ்க்­கை யைக் கவனமாக அணுகுபவர்கள், வரு­மா­னத்­தில் பெரும்­ப­கு­தியைச் சேமித்து வைப்பதாவும் கூறுகிறார்.

"தங்களது வரு­மா­னத்­தில் மூன்­றில் ஒரு பங்கை சேமிப்­புக்­கும் பத்­தில் ஒரு பங்கை பொழு­து­போக்­குக்­கா­க­வும் செல­வ­ழிப்­ப­வர்­களே வள­மான வாழ்க்­கை வாழ­மு­டி­யும். சேமிப்பால் ஒரு­வ­ரது வாழ்க்­கை நம்­பிக்­கைக்கு உரி­ய­தாக மாறும். சேமிப்­ப­து­டன் அதை­ச் ச­ரி­யான முறையில் முத­லீடு செய்­வ­தும் முக்­கி­யம். இந்த உலக சிக்­கன நாளில் தமி­ழக மக்­கள் அனை­வ­ரும் இல்­லத்­துக்கு ஓர் அஞ்­ச­லக தொடர் சேமிப்புக் கணக்கை அரு­கில் உள்ள அஞ்­ச­ல­கங்­களில் தொடங்கி பயன்­பெற வேண்டும்," என்று ஸ்டா லின் கேட்டுக்கொண்டுள்ளார்.

"மக்­கள் தங்­க­ளது சேமிப்புத் தொகையைப் பாது­காப்­பான இடத்­தில் முத­லீடு செய்­தால்­தான் தேவைப்­படும் நேரத்­தில் அதைத் திரும்பப் பெறமுடி­யும்.

"இந்தச் சூழலில், அஞ்­ச­ல­கங்­களில் செயல்­ப­டுத்­தப்­படும் சிறு­சே­மிப்புத் திட்­டங்­கள் பாது­காப்­பா­னவை. எனவே, மக்­கள் அனை­வ­ரும் சிக்­க­னத்தைக் கடைப்­பி­டித்து, சிறு­சே­மிப்புத் திட்­டங்­களில் முத­லீடு செய்து வாழ்க்கையில் மேன்மை நிலையை அடையும்படி கேட்­டுக் கொள்­கி­றேன்," என்று தமி­ழக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்துள்­ளார்.