ராமஜெயம் வழக்கு: 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

ராமஜெயம் வழக்கு: 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

1 mins read
a03aee1d-f190-465f-a853-408ea0869f25
-

திருச்சி: அமைச்­சர் கே.என்.நேரு­வின் சகோ­த­ரர் ராம­ஜெ­யம் கொலை வழக்குத் தொடர்­பில் 12 பேரி­டம் உண்­மை கண்­ட­றி­யும் சோதனை நடத்த சிறப்புப் புல­னாய்­வுக் குழு­வி­னர் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

2012ஆம் ஆண்டு ராம­ஜெ­யம் நடைப்­ப­யிற்சி சென்­ற­போது படு­கொலை செய்­யப்­பட்­டார். அவ­ரது உடல் திருச்சி கல்­லணை சாலை­யில் கைகால்­கள் கட்­டப்­பட்ட நிலை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்­தக் கொலை வழக்கை ஜெயக்­கு­மார் தலை­மை­யி­லான சிறப்புப் புலன் விசா­ர­ணைக் குழு விசா­ரித்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் பல்­வேறு சம்­ப­வங்­களில் தொடர்­பு­டைய முக்­கியக் கொலைக் குற்­ற­வா­ளி­கள், குண்­டர்­கள் என பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வந்த நிலை­யில், முக்­கியத் துப்பு கிடைத்­துள்­ள­தாக காவலர்­கள் இப்போது தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னால் பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இவ்வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கொலை தொடர்­பாக சந்­தே­கப்­படும் 12 பேரை அடை­யா­ளம் கண்டு அவர்­க­ளி­டம் புல­னாய்­வுப் பிரி­வினர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

சாமி ரவி, மோகன்­ ராம், கணே­சன், சத்­தி­ய­ராஜ், மாரி­முத்து, தினேஷ், சிவா, திலீப், தென்­கோவன், ராஜ்­கு­மார், சுரேந்­தர், கலை­வா­ணன் ஆகிய 12 பேரி­ட­மும் உண்மை கண்­ட­றி­யும் சோதனை நடத்த இன்று காலை முன்­னிலை­யா­கு­மாறு திருச்சி நீதி­மன்­றம் அழைப்­பாணை அனுப்­பி­யுள்­ளது.

இதனால் விரைவில் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.