பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலை

பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலை

1 mins read
6063fc35-0c67-470d-9a50-9d4d03c0b83d
அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சித்த மருத்­து­வா்­கள் மூலம் மக்­க­ளுக்கு நில­வேம்­புக் குடிநீா் வழங்­கப்படுகிறது. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கம், புது­வை­யில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யதை அடுத்து, மாநி­லம் முழு­வ­தும் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் அடுத்த இரண்டு நாள்­க­ளுக்கு கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

திடீ­ரென கனமழை காரணமாக தலை­ந­கர் சென்­னை­யில் வெள்ள அபா­யம் உரு­வா­னால் அதைத் தடுப்­ப­தற்­கான முன்­னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

சென்­னை­யில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை பாதிப்­பு­களை எதிர்­கொள்­ள தயார்­நி­லை­யில் இருப்ப தாக­வும் வெள்­ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்­புள்ள 196 இடங்­கள் அடை­யா­ளம் காணப்பட்டு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை முடுக்கி விட்டு உள்ளதாகவும் தீய­ணைப்பு, மீட்­புப்படை டிஜிபி ரவி கூறி­யுள்­ளார்.

மீட்­புப்பணியில் 898 தீய­ணைப்பு வீரர்­கள், பயிற்சி பெற்ற 250 தன்­னார்­வ­லர்­கள் ஈடு­ப­டத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் சொன்னார்.

இந்­நி­லை­யில், பரு­வ­மழை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக சாலை­களில் உள்ள பள்­ளங்­க­ளைச் சீர­மைக்­கும் பணி­களில் சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். சாலை­களில் குண்­டும் குழி­யு­மாக இருந்த 4,822 பள்­ளங்­கள் சீர­மைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

இதனிடையே, மாநி­லம் எங்­கும் மழை­யால் பாதித்­துள்ள பகு­தி­களில் மருத்­துவ முகாம்­க­ளைத் தொடர்ந்து நடத்­த­வும் அனைத்து மருத்­துவ மனை­க­ளி­லும் சித்த மருத்­து­வர்­கள் மூல­மாக பொது­மக்­க­ளுக்கு நிலவேம்பு குடி­நீர் வழங்­க­வும் பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் செல்வ விநா­ய­கம் அறி­வு­றுத்தி உள்­ளார்.