சோதிடர் கூறியதை நம்பி காதலனைக் கொன்றார்; தவறிழைத்துவிட்டதாகக் கதறியழுத காதலி

சோதிடர் கூறியதை நம்பி காதலனைக் கொன்றார்; தவறிழைத்துவிட்டதாகக் கதறியழுத காதலி

2 mins read
e82b6fd9-a680-43f3-9d9d-3ecaa42111f4
ஷாரோன்­ராஜ், கிரீஷ்மா.படம்: ஊடகம் -

கன்­னி­யா­கு­மரி: தன் ஜாத­கப்­படி முதல் கண­வன் உயி­ரி­ழப்­பான் என்­றும் இரண்­டா­வது கண­வ­ரு­டன் மட்­டுமே சேர்ந்து வாழ­மு­டி­யும் என்றும் ஒரு சோதி­டர் சொன்­னதை நம்பி, தன் காதலனுக்கு நஞ்சு கலந்த குளிர்பானத்­தைக் கொடுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

கன்­னி­யா­கு­மரி மாவட்டம், பாற­சாலை முறி­யன்­கரை பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஷாரோன்­ராஜ், 23. இவர், குமரியில் உள்ள ஒரு கல்­லூ­ரி­யில் எம்.ஏ. இரண்­டா­மாண்டு படித்து வந்­தவர், களி­யக்­கா­வி­ளையை அடுத்த ராம­வர்­மன்­சிறை பகு­தி­யைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற பெண்­ணைக் காத­லித்து வந்­தார்.

இரு­வ­ரும் பல்­வேறு இடங்களி­லும் சுற்றி வந்த நிலை­யில், கடந்த மாதம் 14ஆம் தேதி ஷாரோன்­ராஜ் நண்­பர் ஒரு­வ­ரு­டன் கிரீஷ்மா வீட்­டுக்­குச் சென்­றுள்ளார்.

அங்­கி­ருந்து திரும்பி வந்­த­வர் வயிறு வலிப்­ப­தாக நண்­ப­ரி­டம் கூறி­யுள்­ளார்.

இதைத்­தொ­டர்ந்து, பாற­சாலை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்­சைக்­காக திரு­வ­னந்­த­பு­ரம் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்கு ஷாரோன்­ராஜ் உயிரிழந்­தார்.

இது­கு­றித்து, ஷாரோன்­ரா­ஜின் பெற்­றோர் பாற­சாலை காவல்­நி­லை­யத்­தில் புகார் கொடுத்­த­னர்.

அதில் தனது மகன் ஷாரோன்­ராஜை அவ­ரது காதலி குடும்­பத்­தி­னர் திட்­ட­மிட்டுக் கொன்றுவிட்­ட­தாகக் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­த­னர்.

அதன்­பி­றகு, இவ்­வ­ழக்கு கேரள காவல்­து­றைக்கு மாற்­றப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஷாரோன்­ரா­ஜின் காதலி கிரீஷ்­மா­, அவ­ரது பெற்­றோர் உட்­பட நால்­வரிடம் திரு­வனந்­த­பு­ரம் குற்­றப்­பி­ரிவு அலு­வ­ல­கத்­தில் விசா­ர­ணை நடத்தப்பட்டது.

கிரீஷ்மா,­ பல திடுக்­கி­டும் தக­வல்­க­ளைக் கூறி­னார்.

தான் ஷாரோன்­ரா­ஜைக் காத­லித்து வந்­த ­நி­லை­யில், தன் பெற்­றோர் ராணுவ வீரர் ஒரு­வருடன் அவருக்கு நிச்­ச­ய­தார்த்­தம் செய்து வைத்துள்ளனர்.

இதனையறிந்த ஷாரோன்­ராஜ் கிரீஷ்மாவி­டம் தன்னை ஏமாற்­றி­விட்­டாயே என வேத­னைப்பட்­டுள்­ளார். குடும்பச் சூழ்­நிலை கார­ண­மாக திரு­ம­ணத்­துக்கு ஒப்புக் கொண்­டதாக கிரீஷ்மா, ஷாரோன்­ரா­ஜி­டம் தெரி­வித்­துள்­ளார்.

இந்­­நி­லை­யில் திரு­ம­ணத்­திற்கு இடைஞ்­ச­லாக ஷாரோன்­ராஜ் வர­லாம் என்ற சந்­தே­கத்­தில் ஷாரோன்­ராஜை வீட்­டுக்கு வர­வ­ழைத்து குளிர்­பா­னத்­தில் ரப்­பர் மரத்­துக்கு அடிக்­கும் நஞ்சை கலந்துகொடுத்து கொன்­ற­தாக வாக்­கு­மூ­லம் அளித்­துள்ள கிரீஷ்மா கைதானார்.

இதனிடையே, காவல்நிலை யத்தில் உள்ள கழிவறை சுத்திகரிப் பானைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கிரீஷ்மா திரு வனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.