நாகப்பட்டினத்தில் ஒரு பசு சாலையிலேயே தன் கன்றை ஈன்றெடுத்தது. இந்தக் கன்றுக்காக தாய்ப் பசு நடத்திய பாசப் போராட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தன் பசுவைக் காணாமல் பல்வேறு இடங்களிலும் தேடியபோது, கன்று ஈன்ற நிலையில் பசு கடற்கரை சாலையில் இருப்பதைக் கண்டார். இதையடுத்து ஆட்டோவில் பசுவை ஏற்ற முடியாததால் கன்றுக்குட்டியை மட்டும் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். இதைக் கண்ட தாய்ப்பசு மா... மா... என கத்திக்கொண்டே கன்று செல்லும் ஆட்டோவின் பின்னாடியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடிவந்தது. சற்று நேரத்தில் ஆட்டோவில் இருந்த கன்று கணேசன் வீட்டில் இறக்கி விடப்பட்டது. தன் கன்றை வாஞ்சையுடன் கொஞ்சியது பசு. படம்: ஊடகம்
ஆட்டோவில் செல்லும் தன் கன்றை 2 கி.மீ. தூரம் துரத்திய பசு
1 mins read
-

