தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகனுடன் நண்பனாக விளையாடும் மங்களம்

1 mins read
db5b077a-4db3-4aa5-99e7-b9a6bbe18e8a
-

கும்­ப­கோ­ணம்: கும்­ப­கோ­ணத்­தில் உள்ள ஆதி­கும்­பேஸ்­வ­ரன் கோயி­லில் மங்­க­ளம் என்ற 56 வயது யானை உள்­ளது. இதனை பாகன் அசோக் குமார், 50, பரா­ம­ரித்து வரு­கி­றார்.

வெள்­ளிக்­கி­ழ­மை­களில் அங் குள்ள அம்­மன் முன் மங்­க­ளம் மண்­டி­யிட்டு வணங்கு­வதைக் காண பக்­தர்­கள் திரள்­வர்.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் பாகன் அசோக்­கு­மார் யானை­யின் அரு­கில் அமர்ந்து கைப்­பே­சி­யைப் பார்த்­துக்கொண்­டி­ருந்­தார். தன்­னைக் கவ­னிக்­கா­மல் அப்­படி அவர் கைப்­பே­சி­யில் என்ன கவ­னிக்­கி­றார் என்­பதை மங்­க­ளம் குனிந்து பார்த்து, குரல் எழுப்பி அவ­ரு­டன் விளை­யா­டி­யது.

இத­னைக் காணொளி எடுத்த பக்­தர் ஒருவர் சமூகவலைத்­தளங்­களில் பகிர்ந்­துள்­ளார்.

இது­கு­றித்து அசோக்குமார் கூறு­கை­யில், "நான் பள்­ளிப் பரு­வம் முதலே மங்­க­ளத்­து­டன் பழகி வரு­கி­றேன். பல சம­யம் பள்­ளிக்­குக்­கூட செல்­லா­மல் மங்­க­ளத்தை நீரா­ட­ வைத்து அலங்­க­ரித்­துள் ளேன். அது­மு­தல் மங்­க­ளம் என் உயிர் நண்­ப­னா­கப் பழகிவருகிறது.

"என்னை அவ்­வப்­போது தன் கால்­க­ளுக்கு இடை­யில் வைத்­துக்­கொண்டு கொஞ்­சும். வெளி­யூர் செல்­லும்­போது அத­னி­டம் கூறி­விட்­டுத்­தான் செல்­வேன். மீண்­டும் வரும்­போது என்னை உச்­சி­மு­கர்ந்து, பாசத்தை வெளிக்­காட்­டும்," என்றார். இந்த யானையை 1982ல் காஞ்சி மகா பெரி­ய­வர் வழங்கி உள்­ளார்.

பாகனின் கைப்பேசியைக் குனிந்து கவனிக்கும் மங்களம் (இடது), பாகனை கால்களால் மறித்து விளையாடுகிறது. படம்: ஊடகம்