மியன்மாரில் தவித்த எட்டுத் தமிழர்கள் மீட்பு

சென்னை: மியன்­மா­ரில் நல்ல வேலை கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் சென்று, அங்­குள்ள சட்­ட­வி­ரோ­தக் கும்­ப­லி­டம் சிக்­கித் தவித்து வந்த எட்­டுப் பேர் பத்திரமாக மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்களைச் சென்னை அனைத் துலக விமா­ன­ நி­லை­யத்­தில் வெளி­நா­டு­வாழ் தமி­ழர் நலத்­துறை அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் வரவேற்று, சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்­பி­வைத்­தார்.

தக­வல் தொழில்­நுட்­பத் துறை யில் வேலை, கைநி­றைய சம்­ப­ளம், சொகுசு வாழ்க்கை வாழ­லாம் என்று முக­வர்­கள் கூறிய ஆசை­வார்த்தை களை நம்பி லட்­சக்­க­ணக்­கில் பணத்­தைக் கட்­டி­விட்டு தாய்­லாந்து, மியன்­மார் ஆகிய நாடு­க­ளுக்கு தமி­ழர்­கள் உள்­ளிட்ட இந்­தி­யர்­கள் 300 பேர் வேலைக்­குச் சென்­ற­னர்.

ஆனால், அவர்­கள் எதிர்­பார்த்த படி அங்கு சரி­யான வேலையும் சம்பளமும் கிடைக்காமல், அங்­குள்ள சட்­ட­வி­ரோத மோச­டிக் கும்­ப­லி­டம் சிக்­கித் திண்டாடி வந்­த­னர்.

இதை­த்தொடர்ந்து, அண்­மை­யில் முதற்­கட்­ட­மாக 18 தமி­ழர்­கள் மீட்கப்பட்டனர்.

இப்போது இரண்­டாம் கட்­ட­மாக தீபா மணி, விக்­னேஷ், ராகுல், சிகரன், முஹி­சின், மகேஷ், பால­கோபி, முக­மது பைதீன் ஆகிய எட்­டுப் பேரும் மியன்­மா­ரில் இருந்து மீட்­கப்­பட்டு தாய்­லாந்து வழி­யாக சென்னை விமான நிலையம் வந்­த­டைந்தனர்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் கூறுகையில், "தவ­றான வகை­யில் வழிகாட்­டும் முக­வர்­கள் மீது கடுமையான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். கடந்த 10 நாள்­க­ளுக்கு முன்பு தந்த புகார்­க­ளின் அடிப்­படை­யில் திருச்சியைச் சேர்ந்த இரு­வர் குண்­டர் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்டு உள்­ள­னர்.

"இது­வ­ரை­யில் வெளி­நா­டு­களில் சிக்கித் தவித்த 600 பேரை மீட்டு தமி­ழ­கத்­துக்கு அழைத்து வந்துள் ­ளோம். அவர்களது தகு­தி­யின் அடிப்­ப­டை­யில் அரசு வேலை கொடுக்­கும் வாய்ப்பு நிச்­ச­யம் உள்­ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!