ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

2 mins read
72b39890-03f4-4aa2-a1fd-695c7d31d31f
-

சென்னை: தமி­ழ­கத்­தில் திரு­வள்ளூா், காஞ்­சி­பு­ரம், ராணிப்­பேட்டை உள்­ளிட்ட ஆறு மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இன்று 32 மாவட்­டங்­களில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தா­க­வும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

கன­ம­ழை­யி­னால் பொதுமக்­கள் வீட்­டி­லேயே முடங்கி உள்­ள­னர். இத­னால் அவர்­க­ளது இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, சென்னை, காஞ்சி, திரு­வள்­ளூர், மதுரை உள்­ளிட்ட 24 மாவட்­டங்­களில் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்­கும் சிவ கங்கை, நாமக்­கல், கரூர் ஆகிய மூன்று மாவட்­டங்­களில் பள்­ளி­க­ளுக்­கும் நேற்­றும் இன்­றும் அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­கள் விடு­முறை அளித்து உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

அதே­போல், புதுச்­சேரி மற்­றும் காரைக்­கா­லி­லும் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த சில வாரங்­க­ளா­கவே வட­கி­ழக்­குப் பரு­வ­மழை வேக­மெ­டுக்­கத் தொடங்­கி­உள்­ளது. இதன் கார­ண­மாக கட­லோர, டெல்டா மாவட்­டங்­களில் நல்ல மழை பெய்து வரு­கிறது.

சென்­னை­யில் பலத்த காற்­று­டன் விட்­டு­விட்டு கன­மழை பெய்­த­தால் முக்­கி­யச்யி சாலை­களில் எல்­லாம் தண்­ணீர் பெருக்­கெ­டுத்து ஓடி­யது.

நக­ரின் சில பகு­தி­களில் போக்கு வரத்து நெரி­சல் ஏற்­பட்­ட­தால் பணி முடிந்து வீடு திரும்­பி­ய­வர்­கள் கடும் சிர­மத்­திற்கு ஆளா­கி­னர்.

நள்­ளி­ர­வில் பெய்த கன­ம­ழை­யால் தாழ்­வான பகு­தி­களில் தண்­ணீர் தேங்­கி­யது.

கன­மழை பாதிப்பை எதிர்­கொள்­ளத் தமி­ழக அர­சும் மாவட்ட நிர்­வா­க­மும் தயா­ராகி வரு­கின்­றன.

வங்­கக்­க­ட­லில் உரு­வா­கி­யுள்ள காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி வலுப்­பெற்­றுள்­ள­தால் 13ஆம் தேதி வரை தமி­ழ­கத்­தில் ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது வங்­கக் கட­லில் புதிய காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி உரு­வா­கி­யுள்­ளது. இந்த குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்­தில் ஆழ்ந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகு­தி­யாக வலுப்­பெ­றும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக தமி­ழ­கம், புதுச்­சே­ரி­யில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் மிக கன­மழை பெய்­யும் என இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத் தென்­மண்­ட­லத் தலை­வர் பாலச்­சந்­தி­ரன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "தமி­ழ­கம், புதுவை, காரைக்­கா­லில் அடுத்த மூன்று நாள்­க­ளுக்கு மழை பெய்ய வாய்ப்­புள்­ளது. கட­லூர், டெல்டா மாவட்­டங்­களில் இன்று கன­மழைக்கு வாய்ப்பு உள்­ளது. சென்­னை­யில் மிக கன­மழை பெய்­யும்," எனத் தெரி­வித்­தார்.