'ஆளுநரை நீக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்'

'ஆளுநரை நீக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்'

1 mins read
a5064433-e114-44a0-9cde-4c29be3a9ee1
-
Google News Preferred Icon

சென்னை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவியை மத்­திய அரசு திரும்­பப் பெறா­விட்­டால் நாடு முழு­வ­தும் அவ­ருக்கு எதி­ரா­கப் போராட்டம் நடத்­தப்­படும் என திரா­விட இயக் கத் தமி­ழர் பேரவை எச்­ச­ரித்­துள்­ளது.

அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்தை மீறிப் பேசுவதாக­வும் சர்ச்­சைக்­குரிய கருத்­து­களை வெளிப்­ப­டுத்து வதா­க­வும் ஆளு­நர் மீது குற்­றச்­சாட்­டு­கள் கூறப்படும் நிலை­யில், அவரை நீக்க வலி­யு­றுத்தி மதச் சார்­பற்ற கூட்­ட­ணிக் கட்சி எம்­பிக்­கள் அதி­ப­ரி­டம் மனு அளித்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஆளு­நர் ரவியை திரும்­பப்பெற வலி­யு­றுத்தி சென்னை வள்­ளு­வர் கோட்­டம் அருகே திரா­விட இயக்­கத் தமி­ழர் பேர­வை­யினர் நேற்று ஆர்ப்­பாட்டத்­தில் ஈடு­பட்­ட னர்.

இது­கு­றித்து ஆயி­ரம் விளக்­குத் தொகுதியின் திமுக எம்­எல்ஏ எழி­லன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய போது, "அர­சி­யலமைப்­புச் சட்­டத்­தின்­படி இயங்க மறுக்­கும் எந்த சக்­தி­யா­க இருந்தாலும் அதனை நாம் தகர்க்கவேண்­டும்," என்றார்.

வரம்பு மீறி ஆளு­நர் செயல்­படுவதாகக் குற்­றம்­சாட்­டிய தமி­ழர் பேர­வை­யின் பொதுச்செய­லா­ளர் சுப. வீர­பாண்­டி­யன், "யாராக இருந்­தா­லும் சட்­டத்­துக்கு உட்­பட்­ட­வர்­களா­கச் செயல்­படவேண்­டும்," என வலி­யுறுத்­தி­னார்.