நளினி, முருகன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்

நளினி, முருகன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்

3 mins read
f58099b6-223c-4757-95ad-c63b20847c56
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து முருகன், நளினி உட்பட ஆறு பேரும் விடுவிக்கப்பட்டனர்.படம்: இந்திய ஊடகம் -

சென்னை: முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி கொல்­லப்­பட்ட வழக்­கில் சிறை­யில் அடைக்­கப்­பட்ட கடைசி ஆறு பேரை விடு­விக்க அண்­மை­யில் உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், ராஜீவ் காந்தி கொலை வழக்­கில் வேலூர் மத்­திய சிறை­யில் அடைக்கப்பட்ட நளினி நேற்று விடு­தலை ஆனார்.

31 ஆண்­டு­கள் கழித்து என் மகள் விடு­த­லை­யாகி இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது என நளினி யின் தாயார் பத்மா தெரி­வித்­தார்.

நளி­னி­யைத் தொடர்ந்து முரு­கன், சாந்­தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்­கு­மார் ஆகிய 4 பேரும் சிறை நடை­மு­றை­கள் முடிந்­த­தைத் தொடர்ந்து சிறை­யில் இருந்து விடு­தலை ஆகி­னர்.

இதற்­கி­டையே ஆறு பேரில் ஒரு­வ­ரான நளினி, நியூஸ் 18, விக­ட­னுக்கு அளித்த பேட்­டி­யில், பேரறி வாளன் விடு­த­லைக்­குப் பிறகு ஆறு பேரும் விடு­தலை ஆவோம் என்ற நம்­பிக்கை இருந்­தது என்று கூறி­உள்­ளார்.

"நாங்­கள் ஆறு பேரும் பேர­றி­வா­ள­னும் எந்த தவ­றும் செய்­யா­த­வர்­கள் என்­ப­தால் உண்மை மீது நம்­பிக்கை இருந்­தது. 32 வரு­டங்­க­ளாக சிறை­யில் இருந்­துள்­ளோம். ஆறு பேரும் அவ­ர­வர் குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர­வி­ருப்­பது மகிழ்ச்சி­அளிக்­கிறது, எனது மகள் ஹரித்­ரா­வு­டன் வாழ விரும்­பு­கி­றேன்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் மனித வெடி­குண்டு தாக்­கு­தல் மூலம் கொல்­லப் பட்­டார். இந்த வழக்­கில் 1998ஆம் ஆண்டு 26 பேருக்கு தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இதில் படிப்­ப­டி­யாக 19 பேர் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். ஆனால் நளினி, முரு­கன், பேர­றி­வா­ளன், சாந்­தன், ரவிச்­சந்­தி­ரன், ஜெயக் ­கு­மார், ராபர்ட் பயாஸ் ஆகிய ஏழு பேரும் தூக்குத் தண்­டனை கைதி­க­ளாக இருந்­த­னர். அவர்­க­ளின் தண்­டனை ஆயுள் தண்­ட­னை­யாக குறைக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் பேர­றி­வா­ளன் தன்னை விடு­தலை செய்­யக்­கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்து இருந்­தார்.

இந்த வழக்கு விசா­ரணை நீண்ட நாள்­க­ளாக நடைபெற்ற நிலை­யில் 32 ஆண்­டு­கள் சிறை­வா­சம் அனு­ப­வித்த பேரறிவாளன் கடந்த மே 18ஆம் தேதி விடு­தலை செய்­யப்­பட்­டார்.

இதை­ய­டுத்து நளினி உள்­பட மற்­ற­வர்­களும் தங்­களை விடு­தலை செய்ய கோரிக்கை விடுத்­த­னர்.

இது தொடர்­பாக நளினி, ரவிச்­சந்­தி­ரன் ஆகி­யோர் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­த­னர்.

இந்த வழக்­கில் நளினி, முரு­கன், ரவிச்­சந்­தி­ரன், சாந்­தன், ஜெயக்­கு­மார், ராபர்ட் பயாஸ் ஆகிய ஆறு பேரை­யும் ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் இருந்து விடு­தலை செய்து நீதி­ப­தி­கள் பி.ஆர்.கவாய், பி.வி.நாக­ரத்­தி­னம் ஆகி­யோர் அதி­ர­டி­யாக உத்­த­ர­வு பிறப் பித்தனர்.

விடு­தலை குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ரவிச்­சந்­தி­ர­னின் தாயார் ராஜேஸ்­வரி, தமி­ழக அரசே நட­வ­டிக்கை எடுத்துள்ளது. இதற்­காக தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லினை நேரில் சந்­தித்து நன்றி தெரி­விக்க உள்­ளோம்," என்­றார்.

ஆறு ­பேரில் ஒரு­வ­ரான முரு­கன், மனை­வி­யு­டன் தங்­கி­யி­ருக்­கப் போவ­தாக தனது வழக்­க­றி­ஞ­ரி­டம் கூறி­யுள்­ளார்.

முரு­கன் மற்­றும் சாந்­தனுவை நேற்று முன்தினம் மாலை வழக்கறி­ஞர் ராஜ­குரு சந்­தித்துப் பேசி­னார்.

"விடு­தலை குறித்து தக­வல் அறிந்த இரு­வ­ரும் மிக­வும் மகிழ்ச்சி அடைந்­த­னர்.

"முரு­கன் வெளியே வந்த பின்­னர் தனது மனை­வி­யு­டன் தங்­கி­யி­ருக்கப் போவ­தாகத் தெரி­வித்­தார். மேலும் குடும்­பத்தின­ரு­டன் ஆலோ­சனை செய்து தமி­ழ­கத்­தில் தங்­கி­யி­ருப்­பதா அல்­லது லண்­டன் செல்­வதா என்­பது குறித்து முடிவு செய்யவிருப்­ப­தாக முரு­கன் தெரி­வித்­தார்," என்று வழக்­க­றி­ஞர் ராஜ­குரு மேலும் தெரிவித்தார்.