காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

1 mins read
264b8cf4-02bf-4449-8d4f-6c4ebe7393fd
-

புது­டெல்லி: முன்­னாள் பிர­த­மர் ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் சிறை­யில் உள்ள எஞ்­சிய 6 பேரை­யும் விடு­தலை செய்ய உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ள­தற்கு காங்­கி­ரஸ் கட்சி எதிர்ப்பு தெரி­வித்­தது.

இது தொடர்­பாக காங்­கி­ரஸ் கட்சி பொதுச்­செ­ய­லா­ளர் ஜெய்­ராம் ரமேஷ் வெளி­யிட்ட அறிக்­கை­யில், உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ரவு முற்­றி­லும் ஏற்க முடி­யா­தது," என்­றார்.

"முற்­றி­லும் தவ­றா­னது. இந்­தத் தீர்ப்பை காங்­கி­ரஸ் கட்சி தெளி­வாக விமர்­சிக்­கிறது. இந்­தி­யா­வின் மன­நி­லைக்கு ஏற்ப உச்ச நீதி­மன்­றம் செயல்­ப­டா­தது மிக­வும் துர­தி­ருஷ்­ட­வ­ச­மா­னது," என்­றும் அவர் தெரி­வித்து உள்­ளார்.

காங்­கி­ரஸ் தலை­மை­ய­கத்­தில் பேசிய காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ள­ரான அபி­ஷேக் சிங், ஆறு பேர் விடு­தலை குறித்த உச்ச நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு, நாட்­டின் மன­சாட்­சியை உலுக்­கி­யுள்­ளது. அர­சி­யல் உல­கத்­தின் அனைத்து தரப்­பி­லும் பலத்த கவ­லை­க­ளை­யும் விமர்­ச­னத்­தை­யும் உண்­டாக்கி உள்­ளது," என்று சொன்­னார்.