எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சேர்ந்து இருக்க குறிப்பால் உணர்த்திய பிரதமர்

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சேர்ந்து இருக்க குறிப்பால் உணர்த்திய பிரதமர்

1 mins read
c9d66e2b-b980-4e27-ab1b-8cd61cd451ee
ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி. படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

மதுரை: மதுரை விமான நிலை­யத்­துக்கு வந்த பிர­த­மர் மோடியை தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின், ஆளுநர் ரவி, அமைச்­சர்­கள் கே.கே.எஸ்.எஸ்.ராம­சந்­தி­ரன், தங்­கம் தென்­ன­ரசு, பி.மூர்த்தி உட்­பட பலர் வர­வேற்­ற­னர். பாஜக சார்­பில் கட்­சி­யின் மேலிட பார்­வை­யா­ளர் சுதா­கர் ரெட்டி, எச். ராஜா, முரு­கா­னந்­தம் ஆகி­யோர் வர­வேற்­ற­னர்.

இந்த நிலை­யில் பிர­த­மர் மோடியை வர­வேற்க எடப்­பாடி பழனிசாமி மற்­றும் அவ­ரது அணியை சேர்ந்த ராஜன் செல்­லப்பா, உத­ய­கு­மார், திண்­டுக்­கல் சீனி­வா­சன், நத்­தம் விஸ்­வ­நா­தன் ஆகி­யோ­ருக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

அதே­போல ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பில் ஐவ­ருக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது. இரு அணி­யினரும் நேற்று மதுரை விமான நிலை­யத்­துக்கு வந்­தனர். அரு­க­ருகே இருந்­தா­லும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் ஓ. பன்­னீர் ­செல்­வ­மும் அதி­கா­ரி­க­ளுக்கு இடையே தள்ளி நின்­று­கொண்­டி­ருந்­த­னர்.

இதைக் கண்ட பிர­த­மர் மோடி தனித்­த­னி­யாக நின்ற எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் ஆகி­யோரை சேர்ந்து வரு­மாறு அழைத்­துள்­ளார். இதை­ய­டுத்து வேறு வழி­யில்­லா­மல் இரு­வ­ரும் சேர்ந்து பிர­த­மர் மோடியை வர­வேற்­ற­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. பிர­த­மர் மோடி தங்­களை அழைத்­துப் பேசு­வார் என்ற நம்­பிக் கையு­டன் இரு அணி­களும் காத்­துக் கிடந்­தன. ஆனால், யாரை­யும் சந்­திக்­கா­மல் பிர­த­மர் மோடி திரும்பி­விட்­டார். இதன் மூலம் இரு அணி­களும் சேர்ந்து இருக்க வேண்­டும் என்­பதை பிர­த­மர் மோடி குறிப்­பால் உணர்த்தி சென்­றி­ருக்­க­லாம் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறுகின்­ற­னர்.