வாட்ஸ்அப் தகவலால் விபரீதம்; ஒருவர் மரணம்

வாட்ஸ்அப் தகவலால் விபரீதம்; ஒருவர் மரணம்

1 mins read
47d90f4c-dde5-4c65-b96f-388dc02d1c1a
-
Google News Preferred Icon

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன், 25, அவரது நண்பர் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம், 35 ஆகிய இருவரும், செங்காந்தள் செடியின் கிழங்கை பச்சையாக சாப்பிட்டால் மினுமினுக்கும் சருமத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம் என வாட்ஸ் அப்பில் வந்த தகவலைப் பார்த்து நம்பினர்.

மருத்துவரின் ஆலோசனையில்லாமல் இருவரும், செங்காந்தள் செடியை கண்டுபிடித்து பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.

ரத்தினத்திற்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.