மலேசிய நிறுவனத்தின் பெயரில் ரூ.1.5 கோடி மோசடி; ஆயுதப்படை காவலர் கைது

சென்னை: மலே­சிய நிறு­வ­னத்­தில் பணத்தை முத­லீடு செய்­தால் மாதந்­தோ­றும் கணி­ச­மான தொகை லாப­மாக கிடைக்­கும் என்று ஆசை வார்த்­தை­கள் கூறி மோசடி செய்த ஆயு­தப்­படை காவ­லர் கைதாகி உள்­ளார்.

சென்­னை­யின் புற­ந­கர்ப் பகு­தி­யான ஆவ­டி­யில் ஆயு­தப்­ப­டைப் பிரி­வில் காவ­ல­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார் தர்­மன்.

31 வய­தான இவர் தமது நண்­பர் மூலம் ஆயு­தப்­ப­டை­யில் பணி­யாற்­றும் பூம்­பாண்டி என்­ப­வ­ரி­டம் பண முத­லீ­டு­கள் குறித்து அண்­மை­யில் பேசி­யுள்­ளார்.

அப்­போது மலே­சி­யா­வில் உள்ள எண்­ணெய் நிறு­வ­னம் ஒன்­றில் ஒரு லட்­சம் ரூபாய் முத­லீடு செய்­தால் மாதந்­தோ­றும் 15 ஆயி­ரம் ரூபாய் லாபம் கிடைக்­கும் என்று தெரி­வித்­துள்­ளார்.

இதை நம்­பிய பூம்­பாண்டி, ரூ.5 லட்­சம் கொடுக்க, அவ­ருக்கு மாதந்­தோ­றும் ரூ.75 ஆயி­ரத்தை கொடுத்து வந்­துள்­ளார் தர்­மன். இத­னால் இந்த முத­லீடு நூறு விழுக்­காடு லாப­க­ர­மா­னது என்று நம்­பிய பூம்­பாண்டி, தனக்­குத் தெரிந்த பல­ரி­டம் பணம் வசூ­லித்து, அதை மலே­சிய நிறு­வ­னத்­தில் முத­லீடு செய்­யு­மாறு கூறி, தர்­ம­னி­டம் ஒப்­ப­டைத்­தார்.

மொத்­தம் ரூ.1.44 கோடி தொகையை அவர் அளித்­த­தா­கத் தெரி­கிறது. ஆனால் புதி­தாக முத­லீடு செய்த யாருக்­குமே மாதாந்­திர லாபத் தொகை ஏதும் வர­வில்லை.

இது­கு­றித்து தர்­ம­னி­டம் கேட்­ட­போது, அவர் உரிய பதில் அளிக்­க­வில்லை. இத­னால் அவர் மீது பூம்­பாண்டி உள்­ளிட்ட 16 பேர் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ள­னர். அதன் பேரில் தர்­மன் கைதாகி உள்­ளார்.

அவ­ருக்கு இந்த மோச­டி­யில் உடந்­தை­யாக இருந்த மூன்று பேருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!