பெரியாறு அணை குறித்து பொய்த் தகவல்கள் அடங்கிய குறும்படம்: விவசாயிகள் எதிர்ப்பு

பெரியாறு அணை குறித்து பொய்த் தகவல்கள் அடங்கிய குறும்படம்: விவசாயிகள் எதிர்ப்பு

2 mins read
69aa38d4-921c-43cf-9887-a0f6885eb6c1
-

மதுரை: முல்­லைப் பெரி­யாறு அணை குறித்து அவ­தூறு பரப்­பும் வகை­யில் வெளி­யாகி உள்ள குறும்­படத்­துக்கு தடை­வி­திக்க வேண்­டும் என தமி­ழ­கத்­தில் இயங்கி வரும் ஒருங்­கி­ணைந்த ஐந்து மாவட்ட பெரி­யாறு வைகை பாசன விவ­சாய சங்­கத்­தி­னர் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

'சேவ் கேரளா பிரி­கேட்' என்ற அமைப்பு தற்­போது 'பெரி­யாறு - தி பிளீ­டிங் ரிவர்' என்ற தலைப்­பில் குறும்­ப­டம் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் உண்­மைக்­குப் புறம்­பான தக­வல்­கள் இடம்­பெற்­று உள்­ள­தாக தமி­ழக விவ­சா­யி­கள் கூறு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து, ஒருங்­கி­ணைந்த ஐந்து மாவட்ட பெரி­யாறு வைகை பாசன விவ­சாய சங்­கத்­தி­னர், அக்­கு­றும்­ப­டத்தை எதிர்த்து சுவ­ரொட்­டி­கள் ஒட்டி உள்­ள­னர்.

"கேர­ளா­வில் வழக்­க­றி­ஞர் ரசல் ஜோய் என்­ப­வர் 'சேவ் கேரளா பிரி­கேட்' என்ற அமைப்பை தொடங்கி, பெரி­யாறு அணைக்கு எதி­ராக பிர­சா­ரம் நடத்தி வரு­கி­றார்.

"முல்­லைப் பெரி­யாறு அணைக்கு 142 அடி தண்­ணீரை தாங்­கக்­கூ­டிய சக்தி இல்லை. அணை உடைந்­தால் கேர­ளா­வில் ஐந்து மாவட்­டங்­கள் அழி­யும், 50 லட்­சம் மக்­கள் இறப்­பார்­கள் என கேரளா முழு­வ­தும் இந்த அமைப்பு பொய் பிர­சா­ரம் செய்­தும் போராட்­டங்­கள் நடத்­தி­யும் வரு­கிறது," என பெரி­யாறு வைகை பாசன விவ­சாய சங்­கம் சாடி உள்­ளது.

கடந்த ஜூலை மாதம் கேரள அமைப்­பி­னர் பெரி­யாறு அணை குறித்து ஆவ­ணப்­ப­டம் எடுக்க சமூக ஊட­கங்­கள் மூலம் நன்­கொடை பெற்­ற­தா­கக் குறிப்­பிட்­டுள்ள தமி­ழக விவ­சா­யி­கள், 17 நிமி­டம் ஓடக்­கூ­டிய குறும்­ப­டத்­தால் இரு மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான உறவு பாதிக்­கப்­படும் எனச் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

"எனவே 'பெரி­யாறு' குறும்­படத்தை உட­ன­டி­யாக தடை செய்ய வேண்­டும்.

"பிரி­வி­னையைத் தூண்­டும் ரசல் ஜோய் உள்­ளிட்­ட­வர்­களை தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என பெரி­யாறு வைகை பாசன விவ­சாய சங்­கம் அறிக்கை வழி வலி­யு­றுத்தி உள்­ளது.