சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வயல்வெளியில் தேங்கியுள்ள மழை நீர் தற்போது வடிந்து வரும் நிலையில், பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

