கோடநாடு கொலை வழக்கில் 3,600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி

கோடநாடு கொலை வழக்கில் 3,600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி

1 mins read
028c88a5-21d7-4eda-916f-5f4db06f36b3
-

நீல­கிரி: கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை காவல்­து­றை­யின் சிபி­சி­ஐடி பிரிவு உதகை நீதி­மன்­றத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ளது.

இந்த வழக்கு தொடர்­பாக 316 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் 3,600 பக்­கங்­கள் கொண்ட விசா­ரணை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

காலஞ்­சென்ற முதல்­வர் ஜெய­லலி­தா­வுக்குச் சொந்­த­மான பங்­களா, எஸ்­டேட் ஆகி­யன நீல­கி­ரி­யில் உள்ள கோட­நாடு பகு­தி­யில் உள்­ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்­ரல் 24ஆம் தேதி, ஜெய­ல­லி­தா­வின் மறை­வுக்­குப் பிறகு இந்த பங்­க­ளா­வில் நிகழ்ந்த கொலை, கொள்­ளைச் சம்­ப­வங்­கள் தமி­ழ­கத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின.

இது­கு­றித்து தனிப்­ப­டை­யி­னர் விசா­ரித்து வந்த நிலை­யில், சில புகார்­கள் எழுந்­த­தன் கார­ண­மாக பின்­னர் சிபி­சி­ஐடி பிரி­வி­டம் இந்த வழக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

அதன் பின்­னர் விசா­ரணை சூடு­பி­டித்­தது. ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­கலா, அதி­முக முன்­னாள் எம்­எல்ஏ ஆறுக்­குட்டி ஆகி­யோ­ரி­டம் விசா­ரணை நடந்­தது.

சசி­க­லா­வி­டம் மட்­டும் 30 மணி நேரம் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் 280 கேள்­வி­கள் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

சந்­தேக வளை­யத்­தில் உள்­ள­வர், சாட்­சி­கள் என கடந்த பல மாதங்­க­ளாக 316 பேரி­டம் வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன. அவற்­றின் அடிப்­ப­டை­யில் விசா­ரணை தயா­ராகி உள்­ளது.

கோட­நாடு வழக்கு விசா­ரணை சரி­யாக நடை­பெ­ற­வில்லை என திமுக குற்­றம்­சாட்டி இருந்­தது. பல முக்­கி­யத் தக­வல்­கள் மறைக்­கப்­பட்­ட­தா­க­வும் அப்­போ­தைய அதி­முக அரசை சாடி­யது. அதன் காரணமாகவே சிபிசிஐடி பிரிவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இப்போது விசாரணை அறிக்கையும் தயாராகி உள்ளது.