மீன்தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு

மீன்தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு

1 mins read
344f6ee9-7447-4afd-95bf-e3374b08524f
-

சென்னை: மீன்­தொட்­டிக்­குள் விழுந்த பொம்­மையை எடுப் பதற்கு ஒரு குழந்தை முயற்சி செய்தபோது, எதிர்­பா­ரா­த­வி­த­மாக அந்த தொட்­டிக்குள் கவிழ்ந்து உயி­ரி­ழந்­தது.

சென்னை அம்­பத்­தூ­ரில் வசிக்­கின்­ற­னர் யுவ­ராஜ்-கௌசல்யா தம்­ப­தி­யர். இவர்­களது ஒன்­றரை வய­துப் பெண் குழந்தை வீட்­டில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தது.

யுவ­ராஜ் வேலைக்­குச் சென்­ற­பி­றகு, கௌசல்யா வீட்டு வேலை­ க­ளைச் செய்துகொண்டிருந்­தார்.

அப்­போது, வீட்­டிற்­குள் இருந்த மீன் தொட்­டி­யில் குழந்­தை­யின் விளை­யாட்­டுப் பொருள் ஒன்று விழுந்­துள்­ளது.

அதனை எடுப்­ப­தற்­காக குழந்தை முயன்­ற­போது, அந்த மீன் தொட்­டிக்­குள் தலை­குப்­புற கவிழ்ந்­தது.

பத்து நிமி­டத்­துக்­குப் பின்­னர் அங்கு வந்த கௌசல்யா, குழந்தை மீன் தொட்­டிக்­குள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார். குழந்தை இறந்­து­விட்­ட­தை மருத்­து­வர்­களும் உறுதிப்படுத்தினர்.