சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த இரு நாள் களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடியே 68 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ 539 கிராம் தங்கத்தைச் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கொழும்பில் இருந்து வந்த இரு பெண்கள் உட்பட 15 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் முழு விழிப்பு நிலையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், துபாய், அபுதாபி, கொழும்பு, பேங்காக்கில் இருந்து சென்னை வந்த 15 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஏறக்குறைய பத்து கிேலா தங்கம் கைப்பற்றப் பட்டது. சிலர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த தும் கண்டுபிடிக்கப்பட்டது.

