ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு

புது­டெல்லி: நளினி உள்­ளிட்ட ஏழு பேரின் விடு­த­லையை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்­கல் செய்ய மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி கொலை வழக்­கில் கைது செய்­யப்­பட்டு, 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிறைத்­தண்­டனை அனு பவித்து வந்த நளினி, முரு­கன், பேர­றி­வா­ளன் உள்­ளிட்ட ஏழு பேரை விடு­தலை செய்ய தமி­ழக அமைச்­ச ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு, ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

ஆனால், இந்த விவ­கா­ரத்­தில் ஆளு­நர் தொடர்ந்து மௌனம் காத்து வந்­த­தால், அதனை எதிர்த்து பேர­றி­வா­ளன் தொடர்ந்த வழக்கை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம் அவரை விடு­தலை செய்ய கடந்த மே மாதம் உத்­த­ர­விட்­டது.

இதைத்­தொ­டர்ந்து நளினி, முரு­கன் உள்­ளிட்ட ஆறு பேரை­யும் கடந்த 11ஆம் தேதி உச்ச நீதி­மன்­றம் விடு­வித்­தது.

இதற்கு கடும் அதி­ருப்தி தெரி­வித்­துள்ள காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ஜெய­ராம் ரமேஷ், இவ்விவ­கா­ரத்­தில் மத்­திய அரசு உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­றும் நீதிமன்­றத்­தின் தீர்ப்பு துர­திர்ஷ்ட வச­மா­னது என்றும் விமர்­சித்­தார்.

இதே­போல், மற்ற காங்­கி­ரஸ் தலை­வர்­களும் ஏழு பேரின் விடு­த­லை­யில் மத்­திய பாஜக அரசை குற்­றம்­சாட்டி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், புதுச்­சேரி முன்­னாள் முத­ல­மைச்­சர் நாரா­ய­ண­சாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்­கில் மத்­திய அரசு சீராய்வு மனுத் தாக்­கல் செய்யாவிட்­டால் காங்­கி­ரஸ் சார்­பில் சீராய்வு மனுத் தாக்­கல் செய்யும் என்று கூறி­னார்.

இதை­ய­டுத்து காங்­கி­ரஸ் கட்சி யின் தொடர் அழுத்­தங்­க­ளால் ராஜீவ் கொலை வழக்­கில் சீராய்வு மனுத் தக்­கல் செய்ய மத்­திய அரசு முடிவு செய்­துள்­ள­தாக தகவல்­கள் வெளி­யாகி உள்­ளன.

சட்ட நிபு­ணர்­க­ளு­டன் ஆலோ­சித்து மனுத் தாக்­கல் செய்ய மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­வ­தாகவும் கூறப்­ப­டு­கி­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!