விமான நிலையம் வந்த பயணிகளுக்கு துணிப்பை

விமான நிலையம் வந்த பயணிகளுக்கு துணிப்பை

1 mins read
7e51f5fd-9e9b-4d91-9940-d44b93207a79
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளை பயன்படுத்தும்படி விமான நிலையம் வந்த பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டது.படம்: தமிழக ஊடகம் -

சென்னை: நாடு முழு­வ­தும் ஒரு முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய 'பிளாஸ்­டிக்' பைகள், பொருட்­களை பயன் ­ப­டுத்த வேண்­டாம் என மத்­திய, மாநில அர­சு­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இது மட்டுமல்லாமல், தமி­ழ­கத்­தில் ஒரு முறை பயன்­ப­டுத்­தும் பிளாஸ்­டிக் பைக­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்டுள்­ளது.

இதன் தொடர்­பில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் 'பிளாஸ்­டிக்' பைக­ளுக்கு மாற்­றாக மஞ்­சப்பை பயன்­ப­டுத்­தும் திட்­டத்தை தொடங்கி வைத்­தார்.

இந்த நிலையில் சென்னை மீனம்­பாக்­கம் உள்­நாட்டு விமான நிலை­யத்­தில் விமான நிலைய ஆணை­ய­கம், தனி­யார் அமைப்­பு­டன் இணைந்து பய­ணி­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளி­டம் ஒருமுறை பயன்­ ப­டுத்­தும் பிளாஸ்­டிக் பொருள்களால் ஏற்­படும் தீமை­கள் குறித்து விளக்­கப்­பட்டது. 'பிளாஸ்­டிக்' பைக­ளுக்கு பதி­லாக துணிப்­பை­களை பயன்­ப­டுத்த பய­ணி­கள் கேட்­டுக் கொள்­ளப்­பட்­ட­னர். பயணிகளும் துணிப் பைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.