கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

2 mins read
9fd29570-a0dc-421d-a894-9a5c8a94479b
-

சென்னை: தமி­ழ­கத்­தின் கட­லோரப் பகு­தி­களில் இரண்டாவது நாளாக நேற்று பாது­காப்பு ஒத்­தி­கை நடத்­தப்­பட்­டது.

2008ஆம் ஆண்­டில் மும்பை கடல் வழி­யா­கப் புகுந்து பயங்­க­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­தி­ய­தால் ஆண்­டுக்கு இரண்டு முறை பாது­காப்பு ஒத்­திகை நடத்­தப்­பட்டு வரு­கிறது. சென்னை முதல் கன்­னி­யா­ குமரி வரை­யில் உள்ள 13 கட­லோர மாவட்­டங்­களில் நடை­பெற்று வரும் பாது­காப்பு ஒத்­தி­கை­யில் 5,000க்கும் மேற்­பட்ட கட­லோ­ரப் பாது­காப்புப் படை­யி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

சென்­னை­யில் மெரினா கடற்­கரை, பட்­டி­னப்­பாக்­கம் கட­லோ­ரப் பகு­தி­களில் 2வது நாளாக பாது­காப்பு ஒத்­திகை நடத்­தப்­பட்­டது.

கட­லோர மாவட்­டங்­களில் நடந்த பாவ­னைப் பயிற்­சி­யில் பயங்­க­ர­ வாதி­கள்­போல ஊடு­ரு­வி­ய­வர்­களை பல இடங்­களில் காவல்­து­றை­யி­னர் மடக்­கிப் பிடித்­த­னர்.

சில பகு­தி­களில் ஊடு­ரு­வி­யவர்­களை அவர்­கள் பிடிக்­கத் தவ­றி­னர். இறுதி நாளான நேற்று கட­லோரப் பாது­காப்புப் படை­யி­ன­ரு­டன் சுங்கத் ­து­றை­யி­ன­ரும் இணைந்து ஒத்­தி­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து கட­லோ­ரப் பகு­தி­ கள் அனைத்­தும் காவல்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது. கன்­னி­யா­கு­மரி கட­லோ­ரப் பாது­காப்புக் குழு­மத்­தின் காவல் அதி­கா­ரி­கள், இரண்டு அதி­ந­வீன சுற்றுக்காவல் பட­கு­கள் மூலம் கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர். சின்­ன­முட்­டம், பஞ்­ச­லிங்­க­பு­ரம், மகா­தா­ன­பு­ரம், தேங்­காய்­பட்­ட­ணம், கூடங்­கு­ளம் உட்­பட 10 இடங்­களில் உள்ள கட­லோரப் பாது­காப்பு குழும காவல்துறைக்­குச் சொந்­த­மான சாவ­டி­களில் சோதனை நடத்­தப்­பட்­டது.

அந்த சம­யத்­தில் தப்­பிச் செல்ல முயற்சி செய்த பயங்­க­ர­வா­தி­கள்­போல நடித்த நால்­வரை கட­லோ­ரப் பாது­காப்பு குழும காவல்­து­றை­யி­னர் மடக்­கிப் பிடித்­த­னர். அடுத்த ஆண்டும் இந்த ஒத்திகை நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.