'இரவில் சாப்பிடாமல்கூட இருந்துள்ளேன்'
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அவர் அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பர்கூர் தாமரைகரை பகுதிக்குச் சென்றார்.
அங்கு சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். மலைவாழ் மக்களுடன் தனது தொலைபேசியில் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்து மலையாளி என்ற சமூகத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார்.
பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்த அண்ணாமலை கண்ணீர்விட்டு கோரிக்கை விடுத்தவரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்போது உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பின்னர் சோளகர் சமூகத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, அங்கு மதிய உணவாக களியை விரும்பி சாப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில் சென்னை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த 'நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்' என்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை தனது ஆரம்பக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"கரூரில் விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். பொறியியல் பட்டத்தை முடித்ததும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டித் தருவேன் என்று குடும்பத்தினர் நினைத்தனர். என்னுடைய படிப்புக்கும் வேலைக்கும் தொடர்பு இல்லாததால் வேலைக்குச் செல்லவில்லை. சொந்தமாக வணிகம் செய்யலாம் என லக்னோவில் 8.50 லட்சம் கடன் வாங்கி பின்னர் 'எம்பிஏ' படித்தேன்.
"இதன் பின்னர் ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாரானேன். என்னுடைய செலவுகளை சமாளிப் பதற்காக, ஒரு பயிற்சி நிறுவனத்தில் வகுப்பு எடுத்தேன். மாதக் கடைசி நாளில் செலவை கட்டுக்குள் வைப்பதற்காக இரவு உணவைத் தவிர்த்து இருக்கிறேன்.
"இதற்காகவே மதிய நேரத்தில் முழுச் சாப்பாடு கிடைக்கும் உண வகங்களை தேடிச் சென்று இருக் கிறேன். இப்படியெல்லாம் தேவையை குறைத்துக்கொண்டு 'யுபிஎஸ்சி' தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருந்தேன். இதன் காரணமாக கடந்த 2011ல் 'யுபிஎஸ்சி' தேர்வில் வெற்றி பெற்று 'ஐபிஎஸ்' ஆனேன்," என்றார்.
"பலமுறை தேர்வு எழுதுபவர்கள் இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் தங்களுடைய உறவினர், நண்பர்கள் ஆகியோரின் பழிச்சொற்கள், அவச் சொற்கள் மற்றும் அவமானங்களை கடந்தே வெற்றியை பெறுவார்கள். நான் போட்டித் தேர்வு எழுதும் எண்ணத்தை எனது தந்தையிடம் சொன்னபோது 'ஊருக்கு வந்து விடாதே, பயிற்சி செய்' என்றார். இதுபோன்ற சூழல்தான் நாம் உறுதி யுடன் உழைப்பதற்கான நம்பிக்கை பிறக்கிறது," என்று அண்ணாமலை கூறினார்.

