ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை யினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பார்வையை இழந்துள்ள நிலையில், காரைக்கால் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து கடந்த திங்கள் அன்று 500 விசைப்படகுகளில் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கச்சத் தீவு அருகே சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.
அப்போது, அந்தோணி அடிமை என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது படகால் மோதினர்.
அத்துடன், தமிழக மீனவர்களின் படகுக்குள் ஏறிய ஐந்து கடற்படை வீரர்கள், எட்டு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.
இதில் கண்ணில் பலத்த காயம் அடைந்த மீனவர் ஜான்சன், 48, மதுரை தனியார் மருத்துவமனையில் நவம்பர் 15ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தங்கச்சிமடத் தில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார்.
14 மீனவர்கள் கைது
இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுச்சேரி, காரைக் கால் கடற்கரையில் இருந்து சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் அவர்களது படகுடன் சிறை பிடித்த னர். காரைநகர் கடற்படை முகாமிற்குக் கொண்டுசென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழகம், புதுச்சேரி மீனவர்கள், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக் கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
15 மீனவர்கள் விடுதலை
இந்நிலையில், கச்சத்தீவு அருகே கடந்த 5ஆம் தேதி கைதான ஒரு சிறுவன் உள்பட 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் இன்னும் ஒரு சில நாள்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணில் உள்ள நரம்புகள் சிதைந்து, 90% பார்வை பறிபோய் விட்டது என்றும் இனி பார்வை திரும்ப வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்பவர்களை இப்படித் தாக்குவது முறையல்ல.
மீனவர் ஜான்சன்