சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
உதவிப் பேராசிரியருக்கான தோ்வு நடத்தப்படும்போது அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளாா்.இதன்காரணமாக அவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், முறையாகத் தோ்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேரா சிரியா்களின் நியமனமும் செல்லாது என உத்தரவிட்டாா்.

