புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என நவம்பர் 11ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யவேண்டும் என மத்திய அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தங்கள் தரப்பைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், மத்திய அரசின் இந்த சீராய்வு மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

