மூன்று திருமணம்: கணவரை மன்னித்த மனைவிகள்

மூன்று திருமணம்: கணவரை மன்னித்த மனைவிகள்

1 mins read
5ac4c5cf-56ec-4ad3-bd06-adf195d41848
-

கோவை: கைப்பேசி கடை­ உரி­மை­யா­ளர் ஒரு­வர், அடுத்­த­டுத்து மூன்று பெண்­க­ளைத் திரு­ம­ணம் செய்து, அதுகுறித்து மூவருக்­கும் தெரி­யாத வகை­யில் குடும்­பம் நடத்தி வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், ஒரு சம­யத்­தில் அவர் பிரச்­சி­னை­யில் சிக்­கிக்­கொள்ள, தன் கண­வர் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டாம் என மூன்று மனை­வி­க­ளும் காவல்­நி­லை­யத்­தில் கூறி­விட்­ட­னர்.

இதை­ய­டுத்து, அவர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், இப்­போது மூன்று மனை­வி­களும் அவரை விட்­டுப் பிரிந்து சென்றுவிட்­ட­னர்.

கோவை மாவட்­டம், ஊஞ்­சப்­பா­ளை­யத்­தைச் சேர்ந்­த­வர் போச­ன­கு­மார், 28. கைப்பேசி கடை நடத்தி வரும் அவ­ருக்­குத் திரு­ம­ண­மாகி ஒரு மகன் உள்­ளார்.

இந்­நி­லை­யில், ஐத­ரா­பாத்­தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரை­யும் பொள்­ளாச்­சி­யைச் சேர்ந்த தனது நண்­ப­ரின் தங்­கை­யை­யும் திரு­ம­ணம் செய்­து­கொண்டு உல்­லா­ச­மாக இருந்து வந்­துள்­ளார்.

ஒரு சம­யம் ஐத­ரா­பாத் பெண் தான் கொடுத்த ரூ.10 லட்­சத்­தைக் கேட்க, பிரச்­சினை காவல்­நி­லை­யம் சென்­றது. விசா­ர­ணை­யில் போச­ன­கு­மா­ரின் மூன்று திரு­மணம் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

ஐத­ரா­பாத் பெண் தன் பணத்­தைத் திருப்­பிக் கொடுத்­தால் பிரிந்து செல்­வ­தா­கக் கூறிச் சென் றார். பொள்­ளாச்­சியைச் சேர்ந்த பெண், போச­ன­கு­மா­ருக்கு ஏற்­கெ­னவே திரு­ம­ணமாகி மனைவி, பிள்ளை இருப்­பது தெரி­யாது எனக் கூறி கைவிட்டுச் சென்­றார்.

முதல் மனை­வி­யும் தன் கண­வர் பல பெண்­க­ளு­டன் வாழ்­ந்தது வேதனையானது எனக் கூறி தாய்வீடு சென்­று­விட்­டார்.