திருப்பூர்: தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 'பிரெய்ல்' நூலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 'பிரெய்ல்' வடிவில் 41 தமிழ் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்கள் அச்சிட்டு வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
"பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் பயன்பெறும் வகையில் 46 தமிழ் நூல்களை 'பிரெய்ல்' நுால்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
"எட்டுத்தொகை, திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 வகை நூல்களில் எளிய உரைநடையும் இடம்பெற்றிருக்கும்.
"அனைத்து நூல்களும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்," என்றும் சந்திரசேகரன் மேலும் கூறியுள்ளார்.

