கால்வாயைச் சொந்தமாக தூர்வாரிய கிராம மக்கள்

கால்வாயைச் சொந்தமாக தூர்வாரிய கிராம மக்கள்

1 mins read
45ca3387-4164-4b77-a69b-24f89f387810
-

திருமங்கலம்: பொதுப்பணி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதால், தூம்பக் குளம் கிராம மக்கள் குண்டாற் றைத் தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.

தென் மாவட்டங்களில் உள்ள கடலில் கலக்கும் நதிகளில் குண்டாறும் ஒன்றாக உள்ளது.

திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை செல்லும் இந்தக் குண்டாறு ராமநாதபுரம் மாவட்டக் கடலில் கலக்கிறது.

இந்தக் குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி அடுத்தடுத்த கிராமங்களும் பயனடைந்து வருகின்றன.

இந்நிலையில், பருவமழையால் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுப் பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர் வாரப்படாமல் முட்புதர்களும் செடி, கொடிகளும் அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தூம்பக் குளம் பகுதி மக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை எல்லாம் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

இதையடுத்து, தூம்பக் குளம் கிராம மக்கள் தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.