சென்னை: கலைமாமணி விருது வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்தை தான் வரவேற்பதாக நடிகர் ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
"விருதுக்குத் தகுதியான வர்களைத் தேர்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும்," என்று கூறிய அவர், "அதிக அளவில் படங்களில் நடித்து, வயதாகி உள்ள ஒருவருக்கு விருது வழங்குவது நல்லது. 50 அல்லது 100 படங்களில் நடித்துள்ளவர்களுக்கு விருதை வழங்கலாம். விருது பெறுபவர் யாரென்று ஒருவர் பார்த்தவுடன் தெரியவேண்டும்," என்றும் அவர் சொன்னார்.

