மதுரை: கலையைப் பற்றி தெரியாத வர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
"பொதுவாக கலைத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு மட்டுமே கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது இரண்டு மூன்று படங்களில் நடித்துவிட்டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது," என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தகுதியில்லாதவர்களுக்கு கலை மாமணி விருது வழங்குவது தொடர்ந்தால் இயல், இசை, நாடக மன்றத்தைக் கலைக்க உத்தரவிட நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருநெல்வேலி யைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
"சென்னையில் 2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விரு துகள் 2021ல் மொத்தமாக வழங்கப்பட்டன.
"அவசர கதியில் தகுதியில்லா தவர்களுக்கும் கலைமாமணி விரு துகள் கொடுக்கப்பட்டன. இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர், தலைவரின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
"இதனால் தகுதியில்லாதவர் களுக்கு வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் சமுத்திரம் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் கூறும்போது, "கலைகள் பற்றி தெரியாதவர்களுக்குக் கலைமாமணி விருது வழங்கப்படுவதன் மூலம் விருதுக்கான மரியா தையே இல்லாமல் போய்விட்டது," என்று கூறினர்.
எதன் அடிப்படையில் கலை மாமணி விருது வழங்கப்படுகிறது? விருதுக்கு எவ்வாறு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் "2021ல் கலைமாமணி விருது வழங்கியது குறித்தும் தற்போது வழங்கப்பட்ட இவ்விருதுகள் குறித்தும் தமிழகச் சுற்றுலா, கலைத்துறைச் செயலாளர், தமிழக இயல், இசை, நாடக மன்றத் தலைவர், செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்," என உத்தரவிட்டு, விசாரணையை இம்மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

