ஜெயலலிதாவின் விசுவாசிகள் இணைய தினகரன் அழைப்பு

ஜெயலலிதாவின் விசுவாசிகள் இணைய தினகரன் அழைப்பு

3 mins read
55d44366-b3a4-4a7e-8a86-2f8dd33e739c
-

மயி­லா­டு­துறை: நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஜெய­ல­லி­தா­வின் விசு­வா­சி­கள் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திரள வேண்­டும் என்­றும் அவ்­வாறு செய்­தால் தேர்­த­லில் எளி­தில் வெற்றி பெற­லாம் என்­றும் டிடிவி தின­க­ரன் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

அம­முக பொதுச் செய­லா­ள­ரான அவர், இரட்டை இலை சின்­னம் இல்­லா­மல் எடப்­பாடி பழ­னி­சா­மி­யால் எது­வும் செய்ய முடி­யாது என்­றார்.

மயி­லா­டு­து­றை­யில் மழை, வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளைப் பார்­வை­யிட்ட அவர், பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அப்­போது, கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான ஓ.பன்­னீர் செல்­வத்­தையே பழ­னி­சாமி கட்­சியை விட்டு நீக்­கி­யதை ஏற்க இய­லாது என்­றார்.

"காலஞ்­சென்ற முதல்­வர்­கள் எம்­ஜி­ஆர், ஜெய­ல­லிதா ஆகிய இரு­வ­ரும் இரட்டை இலை என்ற வெற்­றிச் சின்­னத்தை மக்­கள் மன­தில் பதிய வைத்­த­னர்.

அந்­தச் சின்­னத்தை வைத்­துக் கொண்­டு­தான் எடப்­பாடி பழ­னி­சாமி அதி­முக கட்­சித் தொண்­டர்­க­ளை­யும் தமி­ழக மக்­க­ளை­யும் ஏமாற்றி வந்­தார். அந்­தச் சின்­னம் இல்லை என்­றால் அவ­ரது கதி என்­ன­வா­கும் என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும்.

"பழனிசாமியால் அவரது சொந்த ஊரில்கூட உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை," என்றார் தினகரன்.

அரசு நல்லது செய்தால் வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காற்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மன நிறைவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

இவ்­வாறு தாம் கருத்­து­ரைப்­ப­தால், திமுக கூட்­ட­ணி­யில் அம­முக இணை­யும் என எதிர்­பார்க்க வேண்­டாம் என்­றார்.

"அர­சி­ய­லில் எனது உய­ரம் என்ன என எனக்கு நன்­றா­கத் தெரி­யும். எனவே அதற்­கேற்­பத்­தான் எனது செயல்­பா­டு­களும் அமை­யும்," என்­றார் டிடிவி தின­க­ரன்.

முன்பு ஜெய­ல­லி­தா­வும் ஜானகி அம்­மா­ளும் தனித்­த­னி­யாக போட்­டி­யிட்ட நிலை­யில், அதி­முக ஆட்­சிக்கு வர முடி­யா­மல் போன­தால் ஜானகி அம்­மாள் விட்­டுக்­கொ­டுத்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதன் பிற­கு­தான் அதி­முக வெற்றி பெறத் தொடங்­கி­யது என்­றார்.

"அதே­போல் இப்­போது அனை­வ­ரும் ஒன்­றாக இணைந்­தால்­தான் வெற்றி பெற முடி­யும்.

"எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வெற்­றி­பெற வேண்­டும் என்­றால் ஜெய­ல­லி­தா­வின் உண்­மை­யான தொண்­டர்­கள் ஒரே அணி­யில் திரண்­டால்­தான் முடி­யும்.

"இதற்­காக அனை­வ­ரும் ஒரே கட்­சி­யில் இருந்து பணி­யாற்ற வேண்­டும் எனும் அவ­சி­யம் எழ­வில்லை. தேசிய கட்­சி­யு­டன் கூட்­டணி வைத்­தால்­தான் திமு­கவை வெல்ல முடி­யும்.

"மக்­க­ளுக்கு திமுக மீது நிறைய மனக்­கு­றை­கள் உள்­ளன," என்­றார் டிடிவி தின­க­ரன்.

தமி­ழ­கத்­திற்­குத் தேவை­யான திட்­டங்­கள் கிடைக்க வேண்­டும் என்­றால், அதற்­கேற்ற பிர­த­மரை தேர்வு செய்ய வேண்­டும் என்­றும் குறிப்­பிட்ட அவர், அதற்­கும் முன்­ன­தாக கூட்­ட­ணிக் கட்­சி­க­ளு­டன் இணைந்து செயல்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

ஒரு­வேளை எந்­தக் கூட்­ட­ணி­யும் சரி­வர அமை­ய­வில்லை என்­றால் அம­முக தனித்து போட்­டி­யி­டக்­கூ­டிய துணிச்­சல் மிகுந்த கட்சி என்­றும் அவர் தெரி­வித்­தார்.

தின­க­ரன் இவ்­வாறு பேசி இருப்­ப­தன் மூலம் அவர் அதி­மு­க­வு­டன் கூட்­டணி அமைக்க எந்­த­வித நிபந்­த­னை­யும் இன்றி முன்­வ­ரு­வார் என ஒரு தரப்­பி­னர் கூறி வரு­கின்­ற­னர்.

ஆனால் அப்­படி எல்­லாம் அவர் கூட்­டணி வைக்­க­மாட்­டார் என அவ­ரது ஆத­ர­வா­ளர்­களில் ஒரு தரப்­பி­னர் அடித்­துக் கூறி வரு­கின்­ற­னர்.

'ஓரணியில் திரண்டால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி உறுதி'