சென்னையில் காவல்துறை அதிரடி நடவடிக்கை: சிலைகளை கைமாற்ற முயன்றவர் கைது

சென்னை: சிலை கடத்­த­லில் ஈடு­பட்ட ஒரு­வரை சென்னை காவல்­துறை கைது செய்­தது. பிடி­பட்ட ஆட­வர், இரண்டு சிலை­களை கைமாற்­றி­விட பேருந்து நிலை­யத்­தில் காத்­தி­ருந்­த­போது பிடி­பட்­டார்.

நேற்று முன்­தி­னம் சென்னை, கோயம்­பேடு பேருந்து நிலை­யத்­தில், இரு ஆட­வர்­கள் சந்­தே­கத்­துக்கு இட­ம­ளிக்­கும் வகை­யில் நீண்ட நேரம் நின்­று­கொண்­டி­ருந்­த­னர்.

இதை­ய­டுத்து விசா­ரிக்க முடிவு செய்து, காவல்­து­றை­யி­னர் அரு­கில் சென்­ற­போது, அவ்­விரு ஆட­வர்­களும் தப்­பி­யோட முயன்­ற­னர்.

ஒரு­வர் வேக­மாக தப்­பி­யோ­டி­விட, மற்­றொ­ரு­வர் பிடிப்­பட்­டார். அவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது, இரு சிலை­க­ளைக் கைமாற்­றி­விட தாம் காத்­தி­ருந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

அவர் வைத்­தி­ருந்த ஒரு பையில் பெரிய ஐம்­பொன் சிலை ஒன்­றும் 300 கிராம் எடை­கொண்ட பெரு­மாள் சிலை­யும் காணப்­பட்­டன.

புழக்­கத்­தில் இல்­லாத ஒரு ரூபாய் நோட்டை காண்­பித்­தால், ஒரு நபர் மூன்று லட்­சம் ரூபாய் கொடுத்து அவ்­விரு சிலை­க­ளை­யும் பெற்­றுச் செல்­வார் என்று தம்­மி­டம் கூறப்­பட்­ட­தாக பிடி­பட்­ட­வர் தெரி­வித்­தார்.

மேலும் திருச்­சி­யைச் சேர்ந்த ஒரு பெண்­தான் தம்­மி­டம் சிலை­க­ளைக் கொடுத்து அனுப்பி வைத்­த­தா­க­வும் சுதா­கர் என்ற அந்த ஆட­வர் விசா­ர­ணை­யின்­போது விவ­ரித்­தார். தப்­பி­யோ­டிய ஆட­வ­ருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்ள நிலை­யில், பறி­மு­தல் செய்­யப்­பட்ட சிலை­க­ளின் உண்­மை­யான மதிப்பு, அவை எங்­கி­ருந்து திரு­டப்­பட்­டன என்­பது குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

தமி­ழக காவல்­துறை கடத்­திச் செல்­லப்­பட்ட சிலை­களை மீட்­ப­தில் மிகுந்த முனைப்பு காட்டி வரு­கின்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!