குமரி முதல் காஷ்மீர் வரை
நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்தப் பயணம் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஊட்டுவதாக அமைந்துள்ளது என அக்கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்தானா பகுதியில் நேற்று நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல், அங்குள்ள இளையர்களை வழியில் சந்தித்துப் பேசினார். அப்போது படத்தில் காணும் சிறார்களுடனும் அவர் ஓரிரு நிமிடங்கள் பேசியதோடு புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.
படம்: இந்திய ஊடகம்

