சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு கன மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.
குறிப்பிட்ட சில கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது.

