புதுடெல்லி: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்து டெல்லி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான் சூ துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்விசாரணை நடை பெற்றபோது, அதிமுகவின் கட்சி விதிகளை மீறியது உள்ளிட்ட புகார் களைக் கூறி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பழனிசாமியின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என இபிஎஸ் தரப்பும் அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிய நிலையில், வழக்கு விசாரணையை இம்மாதம் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, அதிமுகவின் எதிர்காலம் நீதிமன்றத்தின் கையில் இருப்பதாக தஞ்சாவூரில் செய்தி யாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
"தன்னைக் காப்பாற்றிக்கொள் வதற்காக அதிமுக இயக்கத்தை அழிக்கப் பார்க்கிறார்," என்று பழனி சாமி மீது குற்றம்சாட்டிய தினகரன், தன்னுடன் இருந்து அதிமுக ஆட்சி யைக் காப்பாற்றியவரை பழனிசாமி வெளியேற்றி உள்ளார். வேறு வழி யின்றி பன்னீர்செல்வமும் போராடி வருகிறார். இன்று அதிமுகவின் எதிர்காலம் நீதிமன்றம் கையில் இருப்பதுபோல் செய்தவர் பழனி சாமிதான் என்றும் கூறினார்.
இதனிடையே, கரூர், சேலம் பகுதிகளில் உள்ள எடப்பாடி அணி யினரின் நூற்றுக்கும் மேற்பட்டடோர் ஓபிஎஸ்சை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர். அதே போல், ஓபிஎஸ் அணியில் இருந்த சிலர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தலைவர் பதவிக்காக இரு தலை வர்களும் நடத்தும் சண்டையால் அதிமுக தொண்டர்கள் சோர்வ டைந்து உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

