கத்தாருக்கு கோடிகோடியாக ஏற்றுமதியாகும் முட்டைகள்

கத்தாருக்கு கோடிகோடியாக ஏற்றுமதியாகும் முட்டைகள்

1 mins read
e8d80095-484a-4d06-b3cb-18d31d016954
-

நாமக்­கல்: கத்­தார் நாட்­டில் உண­வுப் பொருள்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்ள சூழ­லில், தமி­ழ­கத்­தின் நாமக்­கல் மாவட்­டத்­தில் இருந்து கோடிக்­க­ணக்­கி­ல் முட்­டை­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வரு­வ­தாக முட்டை ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கத்­தா­ரில் நடை­பெ­றும் உலகக்­ கிண்­ணக் காற்­பந்துப் போட்டி கார­ண­மாக அங்கு முட்­டை­யின் தேவை மும்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. இது­வரை அங்கு மாதந் தோறும் 50 லட்­சம் முட்­டை­கள் மட்­டுமே ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வந்த நிலை­யில், இப்­போது ஒன்­றரை கோடியாக கூடியுள்­ளது.

இது­தொ­டர்­பாக முட்டை ஏற்று மதி­யா­ள­ரான டாக்­டர் பி.வி.செந்­தில் கூறு­கை­யில், "நாமக்­கல்லில் 1,100 கோழிப்­ பண்­ணை­கள் உள்­ளன. கத்தாரில் உல­கக் கிண்­ணக் காற்­பந்து போட்டி நடை­பெறு­வ­தால் அங்கு உண­வுப் பொருள்க­ளுக்­கான தேவை, குறிப்பாக முட்­டை­யின் தேவை அதி­கரித்­துள்­ளது," என்­றார்.

நான்கு கோடி முட்­டை­கள்

இதே­போல் நாமக்­கல்­லில் இருந்து ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு, ஓமான், பஹ்­ரைன், மாலத்­தீ­வுக்கு மாதந்­தோ­றும் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வந்த முட்­டை­கள் இப்­போது நான்கு கோடி­யாக ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வரு­கிறது என்­றும் பி.வி.செந்­தில் கூறி­னார்.

"உக்­ரேன்-ரஷ்யா போர் கார­ ண­மாக அனைத்­து­ல­கச் சந்­தை­யில் கோழித் தீவ­னம் விலை உயர்ந்­துள்­ளதால் முட்டை உற்­பத்­தி­யில் முக்­கியப் பங்கு வகிக்­கும் துருக்கி போன்ற நாடு­கள் விலையை உயர்த்­தி­யுள்­ளன.

"அதை­விட நாமக்­கல் முட்டை விலை குறைவு என்பதால் கத்­தார், ஓமான் உள்ளிட்ட நாடு­கள் நாமக்­கல்­ முட்­டை­களை அதிக அளவில் வாங்கத் தொடங்­கி­யுள்­ளன," என்று மற்ற சில முட்டை ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கூறியுள்ள­னர்.