திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தின் கழி வறையில் கிடந்த பத்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமான நிறுவனப் பணி யாளர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் பொட்டலம் இருப்பதைக் கண்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் சோதனையில், ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான இரண்டு தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
சிங்கப்பூர் பயணி சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் கழி வறையில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

