சென்னை: கடலூர், எண்ணூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 3ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

