தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக வரிந்து கட்டும் 13 எம்எல்ஏக்கள்

சென்னை: தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கி­ரியை அப்­ப­த­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என 13 எம்­எல்­ஏக்­கள் போர்க்­கொடி உயர்த்தி உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

எனி­னும் அவரை உட­ன­டி­யாக மாற்ற வேண்­டும் என்ற கோரிக்­கையை ஏற்க இய­லாது என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கூறி­விட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால் அழ­கி­ரி­யின் எதிர்த்தரப்­பி­னர் ஏமாற்­ற­ம் அடைந்­துள்ளதாகவும் அவர்­கள் தொடர்ந்து டெல்லியில் முகா­மிட்டு, கட்­சித் தலை­மை­யி­டம் தங்­க­ளது கோரிக்­கையை வலி­யு­றுத்த தீர்­மா­னித்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

காங்­கி­ரஸ் முன்­னாள் மாநி­லத் தலை­வர்­கள் கிருஷ்­ண­சாமி, ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன், கே.வீ.தங்­க­பாலு, சட்­டப்­பே­ரவை காங்­கி­ரஸ் தலை­வர் செல்­வப்­பெ­ருந்­தகை ஆகிய ஐந்து பேரும் கே.எஸ்.அழ­கி­ரிக்கு எதி­ராக உள்­ள­னர்.

கடந்த 15ஆம் தேதி சென்­னை­யில் உள்ள தமி­ழக காங்­கி­ரஸ் தலை­மை­ய­கத்­தில் நடந்த விரும்­பத்­த­காத நிகழ்வு உள்­ளிட்ட சில கார­ணங்­க­ளுக்­காக அழ­கி­ரியை தலை­வர் பத­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என்­பதே இவர்­க­ளது கோரிக்கை எனக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், இளம் நிர்­வா­கியை மாநி­லத் தலை­வ­ராக நிய­மிக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

ஆனால் இப்­போ­து­தான் தாம் தேசி­யத் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுள்­ள­தால் ஒரு மாநி­லத் தலை­வரை உட­ன­டி­யாக நீக்­கு­வ­தில் தமக்கு விருப்­பம் இல்லை என்­றும் மல்­லி­கார்­ஜுன கார்கே கூறி­விட்­ட­தா­கத் தக­வல்.

மேலும், தமக்கு எதி­ரான புகார்­கள் தொடர்­பில் கே.எஸ்.அழ­கிரி கட்­சித் தலை­மைக்கு உரிய விளக்­கங்­களை அளித்­து­விட்­ட­தா­க­வும் டெல்லி காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், அடுத்த சில நாள்­க­ளுக்­குள் தமி­ழக காங்கிரஸ் எம்­எல்­ஏக்­கள் 13 பேர் புது­டெல்லிக்குச் செல்ல இருப்­ப­தா­க­வும் அங்கு கட்­சித் தலை­மை­ய­கத்­தில் கே.எஸ்.அழ­கி­ரிக்கு எதி­ராக மனு அளிக்க இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

மாநி­லத் தலை­வரை உடனடியாக மாற்றவேண்­டும் என்­பதே இவர்­க­ளுடைய முதன்­மைக் கோரிக்­கை­யாக இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் தமி­ழக காங்­கி­ரஸ் பிரமுகர்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக சல­ச­லப்பு நிலவு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!