பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் ஆறு மாத காலம் நீக்கம்

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் ஆறு மாத காலம் நீக்கம்

1 mins read
f5dfa12e-3a90-4959-bc54-54e00314c495
-

சென்னை: தமி­ழக பாஜ­க­வில் இருந்து நடிகை காயத்ரி ரகு­ராம் (படம்) ஆறு மாத காலத்­துக்கு நீக்­கப்­ப­டு­வ­தாக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக பாஜ­க­வின் வெளி­நாட்டு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரி­வின் மாநி­லத் தலை­வ­ராக பொறுப்­பில் இருந்து வந்­தார் காயத்ரி ரகு­ராம்.

இந்­நி­லை­யில், கட்­சிக் கட்­டுப்­பாட்டை மீறி­யும் கட்­சிக்கு களங்­கம் விளை­விக்­கும் செயல்­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­வ­தா­லும் காயத்ரி ரகு­ராம் மீது நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அண்­ணா­மலை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கட்சி நிர்­வா­கி­களும் தொண்­டர்­களும் காயத்ரி ரகு­ரா­மி­டம் கட்சி சார்­பாக எவ்­வி­தத் தொடர்­பும் வைத்­துக்­கொள்ள வேண்­டாம் என அறி­வு­றுத்­தப்­ப­டு­வ­தாக அண்­ணா­மலை கூறி­யுள்­ளார்.

தமி­ழக பாஜ­க­வின் அதி­கா­ர­பூர்வ செய்­தித் தொடர்­பா­ளர்­க­ளைத் தவிர்த்து மற்­ற­வர்­கள் யூடி­யூப் தளங்­க­ளுக்கு நேர்­கா­ணல் வழங்க விருப்­பப்­பட்­டால், அது­கு­றித்து கட்சி­யின் ஊட­கப்­ பி­ரி­வுத் தலை­வ­ரி­டம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் தமது அறிக்­கை­யில் மேலும் அறி­வு­றுத்தி உள்­ளார்.

இந்­நி­லை­யில் தாம் பாஜ­க­வில் தொடர்ந்து நீடிக்­கப் போவ­தாக காயத்ரி கூறி­யுள்­ளார்.