அன்புமணி: கூட்டணி பற்றி பாமக முடிவேதும் எடுக்கவில்லை

அன்புமணி: கூட்டணி பற்றி பாமக முடிவேதும் எடுக்கவில்லை

1 mins read
e2b1a198-bf41-4ab8-be87-66db5b16c89a
-
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி அமையும் என தாம் கூறவில்லை என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பதாகக் கருதப் படுகிறது. இந்நிலையில், பாமக தலைமையில் ஆட்சி அமையும் என அன்புமணி கூறியதாக வெளியான தகவல் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

"நான் கூறாததை எல்லாம் ஊடகங்கள் வெளியிடு கின்றன. கூட்டணி தொடர் பாக பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை," என்று அன்புமணி கூறியுள்ளார்.