மாறு வேடத்தில் சென்ற காவல்துறையினர்; தரகர் தப்பியோட்டம் பல கோடி மதிப்பிலான அரிய சாமி சிலைகள் மீட்பு

மாறு வேடத்தில் சென்ற காவல்துறையினர்; தரகர் தப்பியோட்டம் பல கோடி மதிப்பிலான அரிய சாமி சிலைகள் மீட்பு

2 mins read
2a8101b3-44af-4d89-891b-bc6441cb8cc6
வீட்டில் இருந்து மீட்கப்பட்டஇந்தச் சிலைகள் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்து திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், தப்பியோடிய தரகர் சுரேந்திரன் மூலம் இவை எந்த நாடுகளுக்கு கடத்தப்பட இருந்தன என்ற கோணத்திலும் விசாரணை நடை பெற இருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.படம்: ஊடகம் -

சென்னை: ஒரு வீட்­டில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 15 பழங்­கா­லச் சிலை­களை சென்னை காவல்­துறை அதி­ர­டி­யாக மீட்­டுள்­ளது.

அச்­சி­லை­கள் பல­கோடி ரூபாய் மதிப்­புள்ள சிலை­கள் என்­றும் தரகர் மூலம் அவற்றை விற்­ப­தற்கு விலை பேசப்­பட்டு வந்­த­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த முப்­பது ஆண்­டு­களில் மட்­டும் தமி­ழ­கத்­தில் இருந்து ஏராள­மான அரிய, விலை மதிப்பற்ற சிலை­கள் வெளி மாநி­லங்­கள், வெளி நாடு­க­ளுக்கு கடத்­திச் செல்­லப்­ப­பட்­டுள்­ளன. அவற்றை தமி­ழக காவல்­து­றை­யின் சிலைக்­க­டத்­தல் தடுப்­புப் பிரிவு ஒவ்­வொன்­றாக மீட்டு வரு­கிறது.

அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களில் உள்ள அருங்­காட்­சி­ய­கங்­கள், பழம் பொருள்­களை விற்­பனை செய்­யும் கூடங்­கள் ஆகிய­வற்­றில் கடத்­தப்­பட்ட சிலைகள் இருப்­பதைக் கண்டறிந்து, அவற்றின் மதிப்­பை­யும் உறுதி செய்து, பல்­வேறு நடை­முறை­க­ளைப் பின்­பற்றி சிலை­கள் மீட்­கப்­பட்டு வரு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

எனி­னும் மற்­றொரு பக்­கம் சிலைக் கடத்­தல் நீடித்து வரு­கிறது. இந்­நி­லை­யில், சென்­னை­யில் உள்ள திரு­வான்­மி­யூர் பகு­தி­யில், குறிப்­பிட்ட ஒரு வீட்­டில் 15 பழங்­காலச் சிலை­கள் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள­தா­கக் காவல்­து­றைக்கு ரக­சி­ய தக­வல் கிடைத்­தது. எந்­நே­ரத்­தி­லும் அவை தர­கர் மூலம் விற்­கப்­படும் வாய்ப்­புள்­ளதை அறிந்த காவல்­து­றை­யி­னர் நேற்று முன்­தி­னம் அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

காவல்துறையின் தனிப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் சிலை வாங்கும் வியாபாரிகள் போல மாறுவேடமிட்டு அந்த வீட்டுக்குச் சென்றனர். முன்னதாக சிலை விற்கும் தரகரான சுரேந்திரன் என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உண்மையான வியாபாரிகள் என்று நம்பிய அந்தத் தரகர், காவல்துறை அதிகாரிகளைச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு 15 சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய, தரகர் சுரேந்திரனுடன் பேசியபடியே அவர்கள் நோட்டம் விட்டனர். எனினும் அதிகாரிகளின் பேச்சு, கண்காணிப்பால் சந்தேகமடைந்த தரகர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.

அதன் பின்னர் அவ்வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அம்மன், புத்தர், சிவன், நடராஜர், நந்தி, நர்த்தன பிள்ளையார், ராமர், லட்சுமணர், சீதையின் சிலைகள் மீட்கப்பட்டன. அவை பலகோடி ரூபாய் மதிப்புள்ளவை என்று குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகள், சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் அந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ் பாந்தியாவிடம் இல்லை என்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தப்படுவதுடன், தப்பியோடிய தரகருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின் போது இந்தச் சிலைகள் பல கோடி மதிப்புள்ளவை எனத் தெரிய வந்துள்ளது.