'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை கையாள்வது குறித்து விழிப்புணர்வு

'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை கையாள்வது குறித்து விழிப்புணர்வு

1 mins read
5aa4bc6f-ff3f-49de-ad68-8e0528ed56cf
-

தேனி: தேனி மாவட்­டம், அல்லி நக­ரத்­தில் உள்ள காம­ரா­சர் பேருந்து முனை­யத்­தில் ரிசர்வ் வங்­கி­யின் நாடு தழு­விய விழிப்­பு­ணர்வுக் கலை நிகழ்ச்­சி­களை மாவட்ட ஆட்­சி­யர் முர­ளி­த­ரன் தொடங்­கி­வைத்­தார்.

அதன்­பின்­னர் பொது­மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் துண்­டுப் பிர­சு­ரங்­களை வழங்கி அவர் பேசிய போது, "வங்­கிக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் வங்­கிக்­க­ணக்கை கையாள்­வது தொடர்­பாக பல்­வேறு விழிப் புணர்வு நிகழ்ச்­சி­கள் நடை­பெற்று வரு­கிறது.

"தெரிந்த பய­னா­ளி­க­ளுக்கு மட்­டுமே பண­மாற்­றம் செய்­வது, கடன் பற்று அட்­டைப் பயன்­பாடு, பரி­வர்த்­த­னைக்­குப் பிறகு வரும் குறுஞ்­செய்­தி­யில் உள்ள பரி­வர்த்­தனை தொகை சரி­யாக உள்­ளதா போன்ற தக­வல்­கள் குறித்து கூறப்­பட்­டது.

"அத்­து­டன், இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் மூலம் 'டிஜிட்­டல்' பரி­வர்த்­த­னை­க­ளின் பாது­காப்­பான பயன்­பாடு குறித்­தும் பொது­மக்­க­ளுக்கு கலை­நி­கழ்ச்­சி­கள் வாயி­லாக விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது," என ஆட்­சி­யர் முர­ளி­த­ரன் தெரி­வித்­தார்.

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை ஆட்சியர் முரளிதரன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். படம்: தமிழக ஊடகம்