4 | இந்தியா | வெள்ளி 25 11 2022 40 ஆண்டுகளாக காணாமல் போன தாயைக் கண்டதில் பிள்ளைகள் நெகிழ்ச்சி

4 | இந்தியா | வெள்ளி 25 11 2022 40 ஆண்டுகளாக காணாமல் போன தாயைக் கண்டதில் பிள்ளைகள் நெகிழ்ச்சி

2 mins read
5f75f60b-3141-440f-ae62-404ab1af37bf
பெற்ற தாயை 40 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த பிள்ளைகள் நிர்வாகிகளிடமும் காவலர்களிடமும் நன்றி தெரிவித்து விட்டு தாயை அழைத்துச் சென்றனர். படம்: தமிழக ஊடகம் -

கூடலூர்: கடந்த 40 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தங்களது தாயைக் கண்டுபிடிக்க முடியாமல் மனம் துவண்டு போயிருந்த பிள்ளைகள், இப்போது அவரை மீண்டும் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடவுள் பக்தி கொண்ட மாரி யம்மாளை அவரது பிள்ளைகள் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள், திருவிழா நிகழ்வுகளில் தொடர்ந்து தேடி வந்த நிலையில், இப்போது அவர்களது தாய் கிடைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தைச் சேர்ந்தவர் மாரி யம்மாள், 80. இவரது ஐந்து பிள்ளை களில் இரு மகன்கள், ஒரு மகள் மட்டுமே இப்போது உள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற மாரி யம்மாள் மீண்டும் வீடு திரும்பாமல் மாயமாகிவிட்டார்.

பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் அவரது பிள்ளைகள் காவல் நிலை யத்தில் புகார் அளித்து, அவரைத் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச் சென்ற மாரியம்மாள், அங்கிருந்து தனது ஊருக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்து வந்தவர், அங்குள்ள ஆதரவற்றோர் இல் லத்தில் அடைக்கலமானார்.

இதனிடையே, "கடந்த 40 ஆண்டுகளாக என் பிள்ளைகள் குறித்த நினைவில்லாமல் இருந்து விட்டேன். இப்போது 80 வயதை எட்டிவிட்டதால், இறுதிக் காலத்தி லாவது பிள்ளைகளைப் பார்த்துவிட வேண்டும் என விரும்புகிறேன்," என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தஞ்சாவூர் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு மாரியம்மாள் குறித்த விவரங்களைத் தெரிவித்தனர்.

பின்னர் மாரியம்மாளின் மகன் களுக்கு இதுகுறித்து தகவல் தெரி விக்கப்பட்டது. இதனால் உற்சாக மடைந்த பிள்ளைகள், தொடுபுழா வுக்குச் சென்று மாரியம்மாளை அடையாளம் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர். பின்னர் தாயுடன் சொந்த ஊர் திரும்பினர்.