திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,700 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழகப் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
தீபவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் பக்தர்களின் வருகையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

